பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் கொண்டிருந்தபோது, அவ்விடமிருந்து ஒருவர், சுவாமிக்குச் சார்த்தியிருந்த வயிரப்பதக்கம் அறவும் பொருந்தவும் பாடுமாறு கேட்டனராம். அப்போது அறப்பாடியது இது என்பர் சிலர். இது பொருந்துமாறு இல்லை. பக்தர்கள் இப்படி ஒருபோதும் கேட்கவே மாட்டார்கள். அன்னவயல் சூழ்ந்திருக்கும் ஆரூரான் நெஞ்சத்தில் இன்னம் வயிரம் இருப்பதா-முன்னமொரு தொண்டன்மக னைக்கொன்றுஞ் சோழன்மக னைக்கொன்றும் சண்டன்மக னைக்கொன்றும் தான்? (117) அன்னங்கள் விளங்குகின்ற வயல்களைச் சுற்றவும் கொண்டதாய் அமைந்திருக்கின்ற திருவாரூர்ப் பெருமாளின் திருமார்பிடத்தே இன்னமும் வயிரம் இருப்பதோ? (வயிரம் - வயிரமாலை; சினம்) முதற்காலத்தே ஒப்பற்ற தொண்டனான சிறுத்தொண்டனின் மகனைக் கொன்றானே! மனுச்சோழனின் மகனையும் கொன்றானே! சண்டேசுரனின் தந்தையையும் கொன்றானே! இனியும் எதற்குத் தான் இந்த வயிரமோ? (சினமோ?) வயிரம் இருப்பதா? என்று புலவர் இருபொருள்படப் பாடவும், அந்த வயிரமாலை தானே அற்று விழுந்த தெனவும் கூறுவர், அதனால் செல்வரின் செருக்கும் அழிந்தது என்று கொள்ளுக. அம்பலத்தே போம்! திருவாரூர்த் தியாகேசப் பெருமானைத் தரிசித்த காளமேகம் இவ்வாறு பாடிப் பெருமானைப் போற்றுகின்றார். பாரூ ரறியப் பலிக்குழன் lர் பற்றிப் பார்க்குமிடத் தோரூரு மில்லை யிருக்கவென் றாலுமுள் ளுருமொற்றி பேரூ ரறியத் தியாகரென் றே பெரும் பேரும் பெற்றீர் ஆரூரி லேயிருப் பீரினிப் போய்விடும் அம்பலத்தே. (118) உலகத்திலுள்ள ஊரவர் எல்லோருமே அறியும்படியாகப் பிச்சைக்கு அலைந்தீர், உம்மை நெருங்கி உம் நிலையை ஆராய்ந்து பார்க்குமிடத்தே, உமக்கென ஒர் ஊரும் இருப்பதாகத் தோன்றவில்லை. அது தானில்லை; நீர் இருக்க வென்றாலும் இந்தவூர் ஆகுமோ எனநினைத்தால், உள்ள இதுவும் ஒற்றியாக இருக்கிறது. பேரூர்கள் எல்லாம் அறியும்படியாகப் பெரியதொரு தியாகவான் என்று புகழும் பெற்று விட்டீர்! இனி எவருக்குரிய ஊரிலேதான் நீர் தங்கி யீருப்பீரோ? எதுவும் உமக்கென