இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காவியப் பாவை
அமிழ்தம் கசக்குமோ ?
தமிழ் வாழ்க என்று சொன்னால்
குடிமூழ்கிப் போகுமோ ? இங்கு
-தமிழ்
அமிழ்தம் கசக்குமோ ? தென்றல் கொதிக்குமோ ?
அலறுகிறீர் ! கதறுகிறீர் ! உமக்கிது அடுக்குமோ ?
-தமிழ்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் உண்டீர் !
ஆயினும் அந்தோ நன்றியைக் கொன்றீர் !
தாயினும் மேலாம் தமிழ்மொழி வாழ்ந்தால்
தாக்குமோ ? உம்மைச் சாய்க்குமோ ? எங்கள்
-தமிழ்
துறைதொறும் துறைதொறும் வளர்வழி சொன்னால்
துடிக்கிறீர்! கண்ணீர் வடிக்கிறீர் ! மேலும்
மறைவாகச் சூழ்ச்சிகள் செய்கிறீர் இந்நாள்
மாத்தமிழுக் காக்கங்கள் தேடுவதும் எந்நாள் ?
-தமிழ்
10