பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

103


மூன்றுமாத ஆமணக்கு விதையைக் கண்டுபிடித்துத் தந்துள்ளன. இந்த விதையை ஜூன் அல்லது ஜூலையில் விதைத்துவிட்டால், பெய்யும் மழையிலேயே வளர்ந்து மகசூல் தரும். ஆமணக்கு தனிப்பயிர் சாகுபடி செய்ய ஏக்கர் ஒன்றுக்குச் செலவு ரூ 1500/- ஆகும். வருமானம் ரூ.4000/- கிடைக்கும். செலவு மிகக் குறைவு. நோய், பூச்சித் தாக்குதல்களும் அவ்வளவாகப் பாதிப்பதில்லை. திண்டிவனம் TM.V ரகம் 1, 2, 3 ஆமணக்கில் எண்ணெய்ச் சத்து 50 முதல் 54 விழுக்காடு இருக்கிறது.

ஆமணக்கு எண்ணெய் இன்று பல தொழில் நுட்பங்களுக்குரியதாக விளங்குகிறது. நமது நாட்டில் வழிவழியாக ஆமணக்கு எண்ணெய் வீட்டு உபயோகத்தில் சிறந்த மருத்துவப் பொருளாகப் பயன்பட்டு வந்தது. இன்று ஆமணக்கு எண்ணெய் பயன்படும் விதத்தை ஹைதராபாத்தில் உள்ள இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் (I.I.CT) ஆராய்ந்து பல முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஆமணக்கு எண்ணெய்யிலிருந்து 32 உப பொருள்கள் தயார் செய்யலாம். இந்த உப பொருள்களுக்கு உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஏராளமான பனைமரங்கள் உள்ளன. ஆனால், அவற்றை முறையாகப் பயன்படுத்திப் பொருள் செய்யும் முனைப்பு இல்லை. நெல்லை மாவட்டத்திலும், இராமநாதபுரம் மாவட்டத்திலும் சாயல்குடி, கடலாடிப் பகுதிகளிலும் பனைமரங்களை முறையாகப் பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாடு முழுதும் உள்ள பனைமரங்கள் முறையாகப் பயன்படுத்தப் பெற்றால் நிறைய செல்வம் பெருகும். பனை நுங்கைப் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். பனைபடு பொருள்களில் நல்ல தரமான சாக்லெட் செய்ய இயலும். இந்தத் தொழில்நுட்பம் இன்னும் பயன்படுத்தப்படவே இல்லை. தமிழ்நாட்டில் ஏராளமாக