பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அணிந்துரை
“ஒளிநெறிப்பிழம்பு" தவத்திரு ஊரன் அடிகளார்
சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்
வடலூர் 607 303 - கடலூர் மாவட்டம்.

குன்றக்குடி அடிகளார் என்றால் எல்லாருக்கும் தெரியும். ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி அருணாசலதேசிக பரமாசாரிய சுவாமிகள் என்றால் எல்லாருக்கும் தெரியாது; சைவர்கள் சிலருக்கே தெரியும். குன்றக்குடி அடிகளார் ஒரு மடாதிபதி, ஆதீனகர்த்தர் என்பதே பலருக்குத் தெரியாது. ஏதோ ஒரு தனிப்பட்ட அடிகளார் என்றே பலரும் கருதுவர். குன்றக்குடியில் திருவண்ணாமலை ஆதினம் என்று ஒன்று உள்ளது. சைவ ஆதீனங்கள் பதினெட்டில் அது ஒன்று. அதன் 45ஆம் பட்டம் மடாதிபதிதான் குன்றக்குடி அடிகளார் என்பது பெரும்பாலும் சைவ உலகம் மட்டுமே அறிந்தது. ஏனைய எல்லா மடாதிபதிகளையும் போன்ற ஒருவர் அல்லர் அடிகளார். அடிகளார் புரட்சி மடாதிபதி. ஏனைய மடாதிபதிகளெல்லாம் சமயப்பணி செய்தனர். சமயப்பணி வாயிலாக ஒரோவழி சமுதாயப் பணியும் செய்தனர். ஆனால் அடிகளாரோ நேரடியாகவே சமுதாயப்பணியில் இறங்கினார். "சமுதாயமுனிவர்” என்று வழங்கப் பெற்றார். மடாதிபதிகளில் அதிகமாகச் சுற்றுப்பயணம் செய்த மடாதிபதி, அதிகமாகப் பேசிய மடாதிபதி, அதிகமாக எழுதிய மடாதிபதி, அதிகமாக ஆக்கப்பணி செய்த மடாதிபதி அடிகளார்தான்.

சென்ற தலைமுறையில் ஞானியாரடிகள் என்றொரு மடாதிபதி இருந்தார். ஒருவகையில் அவர் அன்றைய குன்றக்குடி அடிகளார், திருகோவலூ ராதீனத்தின் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயத்தின் ஆதீனகர்த்தர் அவர். ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் என்பது அவருடைய பெயர். அப்பெயரைவிட ஞானியாரடிகள் என்ற பெயராலேயே அவர் நாடு முழுவதும் அறியப் பெற்றார். அந்நாளில் அதிகம் யாத்திரை செய்தவர் அவர். யாத்திரை என்றால் தலயாத்திரை அன்று. சொற்பொழிவுச் சுற்றுப்பயணம். ஞானியாரடிகளின் பயணம் பல்லக்குப்பயணம். குன்றக்குடி அடிகளார் காலம் கார்க் காலம். பல்லக்குப் பயணம் அடிகளார் காலத்தில் மலையேறிவிட்டது. பட்டினப்பிரவேச அளவில்