பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

167


வேற்றுமை அல்லது பிளவு, உடலுக்கும் உயிருக்கும் இடையே தோன்றும் பிளவைப் போன்றது. உடலினின்றும் உயிர் பிரிந்தால் உடல் பிணமாகும். செயலினின்றும் சொல் பிரிந்தால் சொல் பிணமாகும். அதற்கு ஆற்றல் இல்லை. ஆதலால் ஆசிரியர்கள் முன் மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும். அடுத்து, மனம் நுண்ணியது-மெல்லியது. பின்னிக் கிடக்கும் முடிச்சுகளைச் சிக்கல் நீக்கிச் சீர்செய்ய எத்துணைப் பொறுமை தேவையோ அதைவிடப் பன்னூறு மடங்குப் பொறுமை தேவை. மனித குலத்தின் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு குறை காண்பது எளிது-ஆனாலும், குறைகளுக்குரிய காரணங்களைக் கண்டு பிடிப்பதே அரிய முயற்சி, காரணங்களைக் கண்டு, அக் காரணங்களையே களைந்து குற்றங்கள் தோன்றாவண்ணம் செய்தல் வேண்டும். அதனாலன்றோ திருவள்ளுவர்,

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”

–குறள் 948

என்கிறார்.

“நோய் முதல் நாடி” என்று குறிப்பிடுகின்றார். “மூல நோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்” என்பது தமிழ்மறை. ஆசிரியர்கள், மலர்களில் கையாளும் மென்மையைவிட அதிக நுணுக்கமாக மாணவர்களை-மாணவர் மனங்களைக் கையாள வேண்டும். அவர்களின் உணர்ச்சிகளை நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும்- அதற்கு ஒரு மதிப்பும் கொடுக்க வேண்டும். எனினும் தன் திசையில் செல்ல அனுமதிக்கக் கூடாது. அப்படியானால், தடை செய்வது என்று பொருள் அல்ல. அவர்களை நல்வழிப்படுத்துதல் வேண்டும். இதனைத் திருமூலர் “மடை மாற்றல்” என்று குறிப்பிடுவார். உணர்ச்சிகளை அடக்க முடியாது. ஆனாலும் அந்த உணர்ச்சிகள் பற்றிப்படர்கின்ற கொழுகொம்புகளை மாற்றி விடுவதன் மூலம் சீர்செய்ய முடியும். போர் செய்யும் உணர்ச்சி இயல்பி