பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

தந்திருக்க வேண்டும். அடிகளாரைச் சட்ட மேலவை உறுப்பினராக்கியது போதாது. மாநில அரசின் திட்டக்குழுத் தலைவராக அடிகளாரை ஆக்கியிருக்கவேண்டும். அகில இந்தியாவுக்குமே ஒரு மாதிரி கிராமத்தைக் கொடுத்த அடிகளார் மத்திய அரசின் அகில இந்திய திட்டக்குழுவின் தலைவராக இருக்கத் தகுந்தவர்.

சைவ சித்தாந்தம் சமுதாய மேம்பாட்டுக்குப் பயன்பட வேண்டும். பயன்படாவிட்டால் என்ன பயன் என்று கேட்கிறார் அடிகளார். சமயத்தலைவர்களில் சமுதாய சிந்தனையாளர் மிகவும் குறைவு. அவர்களில் தலையாயவர், முதல்வர், அடிகளார், நம் காலத்துச் சமயத்தலைவர்களில் அடிகளாரிடம் சமுதாயச் சிந்தனை இருந்த அளவுக்கு வேறு யாரிடமும் இல்லை, இல்லை, இல்லவே இல்லை.

அடிகளாரது எழுத்துகளெல்லாம் (நூல்களெல்லாம்) அறிவுலகத்திற்கு அடிகளார் அளிக்கும் விருந்து, இன்று காணப்பெறும் சமய சமுதாய சீர்கேடுகளுக்கு மருந்து. சமயம் சமுதாயம் அரசியல் ஆகிய மூன்றிலும் ஈடுபட்டோர் பணியாற்று வோர் அடிகளாரின் நூல்களைப் படிப்பது அவசியம். அடிகளாரது நூல்கள் கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கத் தக்கவை. பொது நூலகங்களிலும் கல்விக்கூடங்களின் நூலகங்களிலும் இன்றியமையாது இருக்கவேண்டியவை.

ஒன்று கிடைத்தால் இன்னொன்று கிடைக்காது என்ற நிலையில் பரந்து விரிந்து சிதறிக்கிடக்கும் அடிகளார் நூல்களையெல்லாம் தேடித் தொகுத்து வகைபிரித்து அடிகளாரின் நூல் வரிசை என ஒரே அளவான நூல்களாக (யுனிபார்ம் எடிஷன்களாக) வெளியிடும் பணியை சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகம் பதிப்புச்செம்மல் திரு. ச. மெய்யப்பன் அவர்கள் மேற்கொண்டுள்ள செயல் மிகப் பெரிதும் போற்றத்தக்கதுமான உருப்படியான பணியாகும். எழுவரைக் கொண்ட பதிப்பாசிரியர் குழுவின் முதன்மைப் பதிப்பாசிரியர் இன்றைய (இரண்டாம்) குன்றக்குடி அடிகளாராகிய தவத்திரு. பொன்னம்பல அடிகளார் அவர்களாவார். அடிகளாரின் வாரிசாக. அடிகளாருக்கு அடுத்த மடாதிபதியாக, 46-ஆம் பட்டம் குருமகாசந்நிதானமாக எழுந்தருளி அருளாட்சி புரிந்து வரும் திருவருள் திரு பொன்னம்பல அடிகளார் அவர்கள் தோற்றம் நடை உடை

கு.XIII.2.