பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

191




36. [1]தமிழினத்தின் பொற்காலம்

திருவள்ளுவர். ஒரு சமுதாயச் சிற்பி. அவர் காலத்தில் மனித சமுதாயத்தில் புரையோடிக் கிடந்த புண்களைக் கண்டு காட்டி மருத்துவம் செய்கிறார். திருக்குறள் மனித குலத்தின் பொதுநூல். அதுவே தமிழ் இனத்தின் தனிமறை, தமிழினத்தின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தவே திருக்குறள் செய்யப்பட்டது. தமிழினத்தின் நாகரிகத்திற்கும், நல்வாழ்க்கைக்கும் இடையூறாகப் புகுந்த பல்வேறு கொள்கைகளைத் திருக்குறள் விளக்குகிறது; தமிழினத்தின் தனித்தன்மை மிக்க நாகரிகத்தைப் பாதுகாத்துப் பேணுகிறது.

உலகியல் அமைப்பில் இன அமைப்பு இயற்கையானது. உடலியற்கூறு, சிந்தனைவழி நாகரிக வளர்ச்சி, சமயநெறி ஆகியவைகளை மையமாகக் கொண்டு இனம் அமைகிறது. இத்தகு இனத்தோற்றமும், வளர்ச்சியும் உலகம் முழுவதிலும் உண்டு. ஓரினத்தின் நாகரிகம் பிரிதோரினத்தின் நாகரிகத்தை எடுத்து விழுங்க முயற்சிக்கும் போதுதான் போர்கள் தோன்றுகின்றன. இன அமைப்பும், இன ஒருமைப்பாடும் நல்வாழ்க்கை அமைப்புக்கு இன்றியமையாத் தேவையாகும். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே இன உணர்வுடன் கடமைகளைச் செய்கின்றவர்களைப் பாராட்டுகின்றார் திருவள்ளுவர், அது மட்டுமின்றித் தெய்வமும் துணை நிற்கும் என்றும் குறிப்பிடுகின்றார்.

‘குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்’

–குறள் 1023

என்பது வள்ளுவர் வாக்கு. அது மட்டுமின்றித் திருவள்ளுவர், இழக்கக்கூடாத மானத்தையும் கூட இனப்பாதுகாப்பிற்காக, - இன முன்னேற்றத்திற்காக இழக்கலாம் என்றும்


  1. பொங்கல் பரிசு