பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.'

-குறள் 314

என்று கூறும் இனிய பண்பாட்டு மொழி.

மனிதனின் உரிமைக்கு மொழி ஊற்றுக்கால்போல், தாய்மொழி வாயிலாக இயல்பாக எண்ணுகிறோம்; அயல் மொழி வாயிலாக அது இயலாததாகும்.

தாய்மொழிக்கு ஆக்கம் தராத முயற்சிகள் இந்த நாட்டை மீண்டும் அடிமை நிலைக்குக் கொண்டு போனால் நாம் வியப்படைவதற்கில்லை. பொருளால் அடிமைப்படக்கூடாது என்பது போல மொழியாலும், சிந்தனையாலும்கூட அடிமைப்படக் கூடாது.

உயிரியல் முயற்சிக்கு மரியாதை கொடுப்பதென்றால் தன்னியல்பாக எண்ண, சிந்திக்க விட வேண்டும். மொழியால், ஆட்சியால் சிந்தனைச் சிறகையொடித்து முடமாக்கி விடக்கூடாது. சுதந்திர நாட்டில் மீண்டும் குருடர்களை செவிடர்களை உருவாக்குவதா?

உயிருணர்ச்சிகளுக்கெல்லாம் விளக்கம் தந்த நுண்மை சான்றமொழி, நமது தமிழ் மொழி. தாய்மொழிதான் சிந்தனை மொழியாக இருக்க வேண்டும்; அதற்கு நாம் எதை ஈடுகொடுத்தாலும் பரவாயில்லை. கொடுத்துப் பெற்றேயாக வேண்டும்.

எண்ணிச் சிந்திக்கின்ற கருத்துக்களைப் பக்கத்திலுள்ளவர்களோடு அளவளாவி, எண்ணத்தைச் சிந்தனையைப் பூர்ணத்துவமடையச் செய்து கொள்ள வேண்டும். மற்றவர்களோடு அளவளாவுவதற்குப் பிறமொழி நமக்கு எந்த வகையில் துணைசெய்ய முடியும் என்று கருதுகிறீர்கள்?

வெளிநாடுகளில் சென்று சுற்றிவர ஆங்கிலம் வேண்டும் என்கிறார்கள். குருஷேவும், புல்கானினும், எலிசபெத் இளவரசியும், எடின்பார்க்கோமகனும் இந்தியாவுக்கு