பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

253


படவில்லை. அரசும் போற்றி வளர்க்கவில்லை. இந்த நிலைமையால் நடை முறையாண்டில் நமது அரசு இக்கல்வித் திட்டத்திற்கு அளித்து வந்த உதவியை நிறுத்தி விட்டதாகத் தெரிய வருகிறது. பிரிதொரு புறம் வகுப்புகளுக்கு போதிய விண்ணப்பங்கள் வந்துசேரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இவ்விரண்டில் எது காரணம், எது காரியம் என்ற துணுக்கமான ஆராய்ச்சியில் நாம் தலையிட விரும்பவில்லை. யார் வைத்த தீயாக இருந்தாலும் எரிகிறது; எரிந்து கொண்டிருக்கிறது. காலத்தாலும் கருத்தாலும் மூத்துவளர்ந்த தமிழ் மொழியின் ஒளிபொருந்திய எதிர்காலம் தள்ளிப் போடப் பெற்றுள்ளது. ஆனால் இந்தத் துக்ககரமான சம்பவம் தமிழகத்தில் யார் மனத்திலும் துணுக்கை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. தமிழகம் தங்கையென காவிரியென பொங்கித் ததும்பிக் கரைபுரண்டு வருகிறது என்ற வார்த்தைகள் வறட்டுப் பொய் என்பது நிரூபிக்கப் பெற்று விட்டது. தமிழைக் காப்பதே நமது கடமை என்று முரசறைபவர் தரப்பிலும் மெளனமே நிற்கிறது. டில்லியில் தமிழா இந்தியா ஆங்கிலமா என்ற சண்டைக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் ஏனோ தமிழகத்தில் தமிழா ஆங்கிலமா? என்ற கேள்விக்குக் கொடுக்கப் பெறவில்லை.

தமிழர்களிடத்தில் தாய்மொழி உணர்ச்சி போதிய அளவு உருப்பெற்று வளரவில்லை. அவர்கள் வாழ்க்கையில் எங்கும் எல்லாவற்றிலும் இன்பத்தமிழே என்ற இலட்சிய நோக்கம் உரம் பெற்றாலன்றித் தமிழுக்கும் எதிர்காலமில்லை! தமிழர்க்கும் எதிர்காலமில்லை.

8. தமிழின் எதிர்காலம்

தமிழக சட்டமன்றத்தில் தமிழக ஆட்சி மொழியாக ஆங்கிலமும் இருக்கும் என்று ஒரு மனதாக முடிவு செய்யப் பெற்றுள்ளது. இதனுடைய விளைவுகள் என்ன? எதிர்காலத்தில் தமிழுக்கு உரிய இடம் எது என்பதை நம்மால்