பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

305


செல்வம் தனியுடைமை ஆகிறது. கூட்டுறவாக இருந்தால் எல்லாருக்கும் கிடைக்கும்.

"உழைப்பிற்கேற்ற ஊதியம்” என்பது இருபக்கமுள்ள கொள்கையேயாம். இந்தச் செயல் முறையிலேயே 'உழைப்புக்கேற்ற ஊதியம் ஊதியத்துக்கேற்ற உழைப்பு” என்ற கொள்கை விளக்கப் பெறுகிறது. உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப் பெறாமையினாலேயே செல்வக் குவியல் ஏற்படுகிறது என்ற கொள்கையை கார்ல் மார்ச்சு விளக்கியுள்ளார். ஒருவன் எட்டு மணி நேரம் உழைக்கிறான். அவனுடைய எட்டு மணி நேர உழைப்பில் உற்பத்தியாகும செல்வம் ரூபாய் 100 மதிப்புள்ளது என்று வைத்துக் கொள்வோம். ரூபாய் 100 ஈட்டித் தரும் உழைப்பாளி பெறும் ஊதியம் இந்த நாட்டில் இன்றுள்ள நடுத்தரக் கூலி நாள் ஒன்றுக்கு ரூபாய் 20 என்று வைத்துக் கொள்வோம். ரூபாய் 20 கூலிபெற்றுக் கொண்டு ரூபாய் 100 மதிப்புள்ள பொருள் உற்பத்தி செய்கிறான். ரூபாய் 80 உழைப்பில் உபரி. இது போல் 100 பேர் வரை தொழிலுக்கமர்த்தித் தொழில் செய்கின்றவன் ஒவ்வொருவர் உழைப்பிலும் ரூபாய் 80 சதவீதம் அல்லது சராசரி 3-4 பங்கு பெறுகிறான். தனி உடைமை திரள்கிறது; குவிகிறது; இதனால்தான் “உழைப்பிற்கேற்ற ஊதியம்” என்ற சோசலிசக் கொள்கையை நடைமுறைப்படுத்த உற்பத்திப் பணிகளை நாட்டு மக்களுக்குரியதாய் அமைக்க வேண்டும். உற்பத்தியின் இலாபங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பது சோஷலிச விதி. இந்த விதியை நடைமுறைப்படுத்த நாம் நம்மைப் பக்குவப்படுத்தி கொள்ளவில்லை. வளர்த்துக் கொள்ளவில்லை.

நம்முடைய நாட்டில் ஒன்றிரண்டு பொதுத்துறை நிறுவனங்கள்தான் சிறப்பாக இலாபத்துடன் நடக்கின்றன. மற்றவைகளுக்குச் சிறந்த உற்பத்தித் திறனும் கூடவில்லை; நிர்வாகத்திறனும் கிடைக்கவில்லை. இழப்புத்தான் மிச்சம்! ஏன்! உழைப்பிற்கேற்ற ஊதியம் என்ற கொள்கை