பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விஞ்ஞானக் கொள்கை உழைப்பிற்கேற்ற ஊதியம் என்ற கொள்கை வெற்றி பெற்றால்தான் உழைப்பார்வமும் வளரும்; வளரும் திறமையும் வளரும்; செல்வமும் பெருகும். உழைப்பிற்கேற்ற ஊதியத்திற்கு உத்தரவாதம் பெறக்கூட முதலில் உழைப்பு வளர்ந்து வளத்தைக் குவிக்க வேண்டும். பானையில் இல்லாதபோது சட்டியில் எப்படி வரும்?

உழைப்பிற்கேற்ற ஊதியத்தை உற்பத்தி அடிப்படையில் நடைமுறைப்படுத்த நாட்டிற்குப் பொதுவான ஒரு சட்டமியற்றலாம். உற்பத்தித் துறை எதுவாயினும் உற்பத்தித் திறனுக்கும் அளவுக்கும் ஏற்றாற் போல் ஊதியம் நிர்ணயிப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்தலாம். இந்நடைமுறை நாட்டிற்கு ஏற்றது. அது போலவே ஊதியத்திற்கு ஏற்ற உழைப்பினை நல்குதல் தவிர்க்க முடியாத கடமை என்ற நியதியையும் வலியுறுத்த வேண்டும். இங்ஙனம் முறையாக உழைக்கத் தவறுபவர்களைச் சமூகமே அங்கீகரிக்கக் கூடாது. உழைக்காமல் ஊதியம் வாங்குவது – உண்பது கேவலம் – விபசாரம் போன்ற ஒழுக்கக் கேடு என்று உணரச் செய்ய வேண்டும்.

இன்று சீரான ஊதியம், விலைப் புள்ளிக்கிசைந்த ஊதியம் பெறாது வருந்துகிறவர்கள் விவசாயிகளும் கிராமப்புறத்துத் தொழிலாளர்களும்தாம். சந்தையில் எல்லாப் பொருள்களின் விலையும் ஏறிவிட்டன. ஆனால், நெல் விலை உயரவில்லை. ஏன்? நகர மக்கள் கிராமத்து மக்களைச் சுரண்டுகின்றனர். இந்தச் சுரண்டல் முறை தீது, இந்தப் பயங்கரமான சுரண்டலிலிருந்து விவசாயிகளை – கிராமங்களை மீட்டாக வேண்டும். இதற்கு உள்ள நேரான வழி உணவுப் பொருள்கள் வியாபாரத்தை அரசு நாட்டுடைமையாக்க வேண்டும். அல்லது கூட்டுறவு ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். இந்த நடைமுறையால் பல நன்மைகள் உண்டு வியாபாரம் என்பது உற்பத்தி செய்யும் துறையன்று. அதனால் இடைத்தரகர் பணியில்