பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காணலாம்; காணமுடியும்! நாம் செய்ய விரும்புகின்றோமா? என்பதே இப்போது உள்ள கேள்வி!

மற்றபடி கருத்தரங்கு சில பரிந்துரைகளையும் உங்கள் முன்னே, இல்லை! இல்லை! – இந்த நாட்டின் முன்னே வைத்திருக்கிறது! நடைமுறைக்கு வரக்கூடிய பரிந்துரைகள்! நாம் நடந்தால் நாடு நடக்கும்! நன்றி!

10. சமுதாயப் பார்வையில் இந்தியக்
கிராமியப்புற மேம்பாடு

இனிய அன்பர்களே! பெருமைக்குரிய துணைவேந்தர் அவர்களே! பேராசிரியப் பெருமக்களே! கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அறிஞர் பெருமக்களே!

பாரதிதாசன் பல்கலைக்கழகம் – சமூக அறிவியல் துறை – நடத்தும் "சமுதாயப் பார்வையிற் கிராமப்புற மேம்பாட்டு"க் கருத்தரங்கைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பளித்தமைக்கு நன்றி, கடப்பாடு.

முன்னுரை

இன்று அதிகமாகக் கிராமப்புற வளர்ச்சி பற்றிப் பேசப்படுகிறது. ஏன் பேசப்படுகிறது? சென்ற காலத்தில் கிராமங்களுக்கு இழைத்த தீங்கிற்குக் கழுவாயாகப் பேசப்படுகிறதா? அல்லது உண்மையிலேயே பேசப்படுகிறதா? என்று கேட்கக் கூடிய அளவுக்கு ஐயப்பாடு தோன்றிவிட்டது. அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் கிராமப்புற வளர்ச்சி பற்றிப் பேசப்படுகிறது. பலசோதனைகளும் செய்யப் பெற்றன. வங்கத்துக் கவிஞரின் "சாந்திநிகேதன் சோதனை", பிரெயின் துரையின் "குர்கான் சோதனை", "மார்த்தாண்டம் சோதனை" ஆகியவை வரலாற்றுப் புகழ் பெற்றவை. ஆனால் அவை முழுமையுற நடந்து வெற்றியைத் தரவில்லை. தோல்வி