பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


படாமலும் காப்பாற்றப்படுகின்றன. ஆதலால் சாண எரிவாயு அடுப்பு அமைத்தல் பலமுனைப் பயன்தரும் பணி. வீடுதோறும் சாண எரிவாயு அடுப்பு அமைத்தல், சமுதாயச் சாண எரிவாயு அடுப்பு அமைத்தல் ஆகிய பணிகளைக் காலக்கெடுவுடன் கூடிய திட்டம் தீட்டி நிறைவேற்ற வேண்டும். அதுவரையில் கிராமம் தோறும் பசுந்தழை வளர்ப்பது ஒரு சிறந்த தொழில்.

பல கிராமங்களில் நல்ல உரமாகக் கூடிய சாணத்தை வறட்டியாக்கி அடுப்பு எரிந்து வருகிறார்கள். இது நல்ல பழக்கமன்று. சாணம் உரமாக்கப்பட்டு விவசாயத்திற்குப் பயன்படுத்தப் பெறுதல் வேண்டும். பஞ்சாயத்தும் ஊர்ப்புறம் போக்கில் எரிப்பதற்குப் பயன்படும் விறகு மரங்களை உற்பத்தி செய்து விறகாக விற்கலாம்.

கால்நடை வளர்ப்பு

விவசாயத்தை அடுத்து, கிராமப்புற வளர்ச்சியில் முக்கிய இடத்தை வகிப்பது கால்நடை வளர்ச்சி, இன்று கிராமங்களில் கால்நடைகள் எண்ணிக்கை குறைந்துக் கொண்டு வருகின்றது. ஒரு ஏக்கருக்கு உரம் சேகரிக்க ஐந்து மாடுகள் அல்லது இருபது ஆடுகள் குறைந்த அளவு தேவை. இந்த அடிப்படையில் இன்று கிராமங்களில் கால்நடைகள் இல்லை. இருக்கும் கால்நடைகளும் விவசாயிகளுக்குச் சுமையாக விளங்குகின்றனவே தவிர, ஊட்டமுள்ள பயனுள்ள கால்நடைகளாக இல்லை. மனிதன் மரங்களை வெட்டி அடுப்பு எரிக்கிறான்: மண்ணைப் பாதுகாக்காமல் மண் அரிப்புக்கு இரையாக்கியும், ஊட்டம் அளிக்காமல் சுரண்டியும் மண் வளத்தைப் பாழாக்குகிறான். கடன் வாங்கும் வசதிக்காகப் புறம்போக்குத் தரிசு நிலங்களைப் பட்டாப் போட்டு வாங்கிக் கடனும் வாங்கி விட்டான். நிலம் ஐயோ! என்று கிடக்கிறது! கிராமத்தில் வளர்ந்த மேய்ச்சல் தரைகள் இல்லை. பசுந் தீவனப் புல் கிடைப்பதில்லை. அதனால்