பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

354

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பிரச்சனை தீராது. மூன்று போகம் சாகுபடி செய்யும் கிராமமாக இருந்தாலும் கூட வேலை நேரமும் குறைவுதான். விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்குச் சராசரி 83 நாள்தான் வேலை இருக்கும். வேலை இல்லாதோர் முழு நேரப் பணி இல்லாதோர் வீணே வாழ்நாளைக் கழிக்கின்றனர். இல்லை இல்லை; வீணே கழிக்கவில்லை. வம்பு வழக்குகளில் காலத்தைக் கழிக்கின்றனர். இன்று விவசாயத் தொழிலில் நெருக்கடி வேறு. இந்தியாவில் 80 சதவிகிதம் விவசாயத்திலும் 20 சதவிகிதம் இதர தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர். குறைந்தது 40 சதவிகிதம் பேர்களை விவசாயத்திலிருந்து வேறு தொழிலுக்கு மாற்றினால்தான் விவசாயத் தொழில் கட்டுப்படியான தொழிலாக அமையும். விவசாயமும் காப்பாற்றப்படும். கிராமங்களில் வேலை வாய்புகளை - கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பழத்தோட்டம் வளர்ப்பு முதலியவற்றை அதிகப்படுத்த இயலும். இது போக வேளாண்மை அடிப்படையிலான உணவுப் பொருள்களை நுகர் பொருள்களாக மாற்றும் தொழிற்சாலைகளையும் ஏற்படுத்தலாம். கிராமங்களில் வாய்ப்பிருப்பின் அன்றாடத் தேவைக்குரிய தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டது போக மீதி நிலங்களில் வேளாண் பொருள் அடிப்படையிலான தொழில்களுக்குரிய மூலப் பொருள்களைச் சாகுபடி செய்யலாம். இதற்கு வாய்ப்பு இல்லையெனில் பிற தொழில்கள் - கிராம வேலை வாய்ப்புக்குத் துணை செய்யக்கூடிய சிறு தொழில்களாகத் தொடங்கலாம். திருக்கோயில்களின் திருப்பணிக்கு அறம் செய்யும் மனப்பான்மையுடையவர்களும் இந்த நூற்றாண்டுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் அறம் என்று உணர்ந்து செயற்பட்டால் நல்லது. கிராமப்புற வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்சாலைகளில் முடக்கும் மூலதனத்திற்கு வருமானவரி வரிகளில் முடக்கும் மூலதனத்திற்கு வருமானவரி வரியையும் தள்ளிக் கொடுக்க அல்லது குறைத்துக் கொடுக்க நடுவணரசு