பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

359


என்று திட்டத்தின் அடிப்படையில் அரசு 50 சதவிகிதம் மான்யமும் மீதி 50 சதவிகிதம் கடனும் வழங்க முன் வரவேண்டும். கடன் வழங்க அரசுக்கு இயலாத நிலையிருப்பின் நாட்டுடைமை வங்கிகள் திட்ட அமைப்பில் ஒரு இலட்சத்திற்குள் மாவட்ட ஆட்சித் தலைவர். அவர்களின் ஒப்புதல் பெற்றும், ஒரு இலட்சத்திற்கு மேல் மூன்று இலட்சம் வரை ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் ஒப்புதல் பெற்றும் பெற உரிமைகள் வழங்கலாம். ஓர் ஊராட்சி எல்லையில் வசிக்கும் எவருக்கும் ஊராட்சி மன்றங்களின் இசைவு அல்லது சான்று பெறாமல் அரசோ வங்கிகளோ கடன் வழங்கக் கூடாது.

ஊராட்சி மன்றத் தேர்தல்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப் பெறுதல் வேண்டும். இதில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் தவறக்கூடாது. ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தும் பொறுப்பைத் தேர்தல் கமிஷனிடமே கொடுத்தல் நல்லது. இது ஓர் ஆலோசனையேயாம்.

கூட்டுறவு

கூட்டுறவு நிறுவனங்களைப் பொறுத்தவரை கூட, ஊராட்சி மன்ற நிலையைப் போலத்தான் உள்ளது. பல்வேறு துறைகளில் பரவலாக அமைக்கப்பெற்ற - கூட்டுறவு சங்கங்கள் கவனிப்பின்றிக் காலந்தள்ளுவதை அறியாதார் யார்? சிறிய பெட்டிக் கடை வைப்பவனும் கூட வசதியாக வாழ்கின்றான். ஆனால் கூட்டுறவு நிறுவனங்களோ ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. ஏன்? பல கூட்டுறவு நிறுவனங்கள் அரசுச் சார்பில் பணிசெய்யும் சங்கச் செயலாளர்களுக்கு ஆயிரக்கணக்கில் ஊதியம் கொடுத்தும் கூட கூட்டுறவுத் தொழிற்சாலையினை நிலைநிறுத்தும் முயற்சி இல்லாமல் கவனக்குறைவுடன் நடத்தப்பெற்று இழப்புக்களைச் சந்தித்து மூடப்பெறுகின்றன. ஆனால் இந்த நிலைமைக்கு இந்த நிறுவனங்களை ஆக்கியவர்கள் யாதொரு