பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

385


நடத்தும் பொறுப்பை ஏற்போம்! பொதுமையில் இந்தப் புவியை நடத்துவோம்! பொதுவில் நடத்துவோம்! கலியுகத்திற்கு விடை கொடுப்போம்! கிரேதாயுகத்தைக் கொணர்வோம்! உலகம் உண்ண உண்போம்! உலகம் உடுத்த உடுத்துவோம்! எங்கு உலகம் தங்கியிருக்கிறதோ அங்கேயே நாமும் தங்குவோம்! 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று போர்முரசு கொட்டுவோம்! மண்ணகத்தில் விண்ணகம் காண்போம்! திருக்குறள் நெறி உலகப் பொது நெறி; வாழும் நெறி என்பதை உறுதிப்படுத்துவோம்!

49. [1]அறிவியலும் வாழ்வும்

மானுடம் தோன்றி ஏறத்தாழ 10 இலட்சம் ஆண்டுகளாகி விட்டன. மனிதனை மற்ற உயிரினங்களிலிருந்து விலக்கி உயர்த்துவது உழைப்பேயாகும். மானுட வாழ்க்கை அறிந்தோ, அறியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ அறிவியல் தடத்திலேயே வளர்ந்து வந்திருக்கிறது. ஆயினும், வாழ்க்கையை, அறிவியல் பார்வையில் பார்ப்பவர்கள் எத்தனைபேர் இன்று நமது நாட்டில் ஏதோ ஒரு விதமான மனச்சோர்வு, சோம்பல் நிலவுகின்றன. வன்முறைகள், வகுப்பு மோதல்கள், கலவரங்கள் நிகழ்கின்றன. இவையெல்லாம் நமக்குக் கலக்கத்தை உண்டாக்குகின்றன. நாம் செல்லும் பாதை சரியானதுதானா? அறிவியல் சார்ந்த பாதைதானா? முன்னேற்றப்பாதைதானா? என்றெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும். நம்மால் ஆய்வு செய்ய முடியவில்லை. இல்லை, ஆய்வு செய்யும் எண்ணமே இல்லை. அதன் காரணமாக நீண்டதூரம் பின்சென்று கடவுளின் கையிலும் விதியின் கையிலும் வாழ்க்கையை ஒப்படைக்கின்றோம். ஏதோ ஒரு தற்காப்பு உணர்வில் சாதி, மதம், கட்சி ஆகியவற்றில் சிக்கிக் சீரழியும் போக்கு வளர்ந்து வருகிறது. இந்தத் திசையிலிருந்து


  1. மதுரை வானொலி 26.10.92