பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

402

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஏற்பட்ட பிறகுதான் கருக் கொள்கிறது. மூளையும் கைகளும் ஒத்திசைந்து ஒத்துழைத்தால்தான் உழைப்பு அறிவறிந்த ஆள் வினையாகும். இந்த உறவு இணைக்கப்படாததன் காரணமாக மூளை தனியே உழைக்கலாயிற்று. உடல் தனியே உழைக்க லாயிற்று. இதனால் மூளை உழைப்பாளர்கள் - அறிவு ஜீவிகள் என்று ஒரு தனிவர்க்கம் தோன்றியது. அது போலவே, உடல் உழைப்பாளர்கள் என ஒரு வர்க்கம் தோன்றியது. இத்தகைய உழைப்புப் பிரிவு தவறான சமுதாய அமைப்பிற்கு வித்திட்டது. காலப்போக்கில் மூளை உழைப்பாளிகள் - அறிவு ஜீவிகள் உயர்ந்தவர்கள் என்றும் உடலுழைப்பு தாழ்வானது என்றும் உடல் உழைப்பாளிகள் தாழ்ந்தவர்கள் என்றும் எண்ணம் உருப்பெற்று விட்டது. இந்த அகன்ற வேறுபாட்டின் காரணமாக அறிவு ஜீவிகளுக்கும் உடல் உழைப்பாளிகளுக்கும் இடையே வேற்றுமை அதிகரித்தது. ஏன் தீண்டாமையே தோன்றி வளர்ந்து இடம் பெற்று விட்டது. இது மட்டுமா? ஊதிய வித்தியாசம், வாழ்க்கை வசதிகள் எல்லாமே வேறுபட்டுவிட்டன. இந்த நடைமுறைகளை மாற்ற வேண்டும். இதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும் போலத் தெரிகிறது. அறிவு ஜீவிகளும் உடலுழைப்பாளர்களும் என்று இணைந்து உழைக்கிறார்களோ அன்றுதான் இந்த உலகு மாறும் வளரும். அர்த்தமுள்ளதாக விளங்கும்; வாழ்வு சிறக்கும்.

51. [1]அறிவியலும் சமுதாயமும்

மனிதக்கூட்டம் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆயினும் என்? மனிதர்கள் இன்னமும் கூட்டமாக வாழ்கிறார்களேயன்றி, சமுதாயமாக வாழக் கற்றுக் கொள்ளவில்லையே! ஏன்? ஏன்? இந்த வினாவுக்கு அறிவியல் உலகம் விடை கண்டு கூறி வழி


  1. சிந்தனைச் சோலை