பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

443


தில்லை! பல பக்குவப்பட்டால்தான் நுகர்வுக்குரியனவாகும். பொருளுற்பத்திக்கும் சிலபல பொருள்களை நுகர்தலுக்குரியனவாகச் செய்தலுக்கும் உழைப்பு தேவை. உழைப்பு மனிதனுடையது. உடைமை வழிச் சமுதாய அமைப்பு தோன்றிய நிலையில் உடைமைகள் எல்லாரிடமும் இல்லை; இருக்கவும் இயலாது. ஆனால், உழைக்கும் சக்தி எல்லா மனிதரிடத்திலும் உண்டு. உழைப்புக்கும் பொருளுடைமைக்கும் உள்ள உறவே “வேலை” என்பது. உழைத்துண்ண வேண்டும் என்ற நியாயம், உழைப்பாலாய உணவை உட்கார்ந்து சாப்பிட்டால் அழியும் என்ற கொள்கை அடிப்படையிலே உடைமை வழிப்பட்ட சமுதாய அமைப்பில் உறவுகள் அன்பினடிப்படையில் அமைவதில்லை; செழித்தும் வளர்வதில்லை. உறவை நிர்ணயிப்பதே பொருளாக அமைந்து விடுகிறது. உறவு நிலையில் விவாதத்திற்குரிய நிலையை எய்திய பொழுதே ஆட்சி, சட்டங்கள், வழக்குகள், தோன்றுகின்றன. இன்று கணவன் – மனைவி உறவுகளில் வரதட்சணை என்ற பெயரில் சொத்து அல்லவா ஆதிக்கம் செய்கிறது! தந்தை – மகனுக்கு இடையே உள்ள உறவில் சொத்தும் பொருளுமே ஆளுமை செய்கின்றன. இந்த உறவில் பல சமயங்களில் மோதல்கள் ஏற்பட்டுக் கொலைகள் நடந்துள்ளன. ஆக, சொத்து சமூகத்தின் ஆக்கத்திற்குப் பயன்பட்ட அளவுக்கு அழிவையும் செய்திருக்கிறது; பண்பாட்டுச் சிதைவையும் செய்திருக்கிறது. சொத்தால், பொருள்களால் எவ்வளவுதான் தீங்கு ஏற்பட்டாலும் சொத்தையும் பொருளையும் சமுதாயம் இழக்காது; இழக்கத் துணியாது. சொத்துடைமையை, பொருளுடைமையைப் பொதுவாக்கினார்கள்; பொதுவுடைமையாக்கினார்கள். பொதுவுடைமைச் சமுதாய அமைப்பிலும் எப்படியோ சொத்துடைமைகள் உருவாகிவிட்டன; முதலாளிகள் உருவாகிவிட்டனர். ஆதலால், சாத்துடைமை தவிர்க்க இயலாதது; தவிர்க்கவும் கூடாதது. சொத்துடைமைச் சமுதாயம் இருந்தே தீரும். ஒரு சொத்துடைமைச் சமுதாய