பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

471


ஆரம்பப் பாடாசாலைகளின் நிலை... எழுதக் கை நடுங்குகிறது! அவ்வளவு மோசமான நிலை!

இன்றைய ஆரம்பக் கல்வி குழந்தைகளை ஊக்கப்படுத்தி ஆற்றுப்படுத்துவதாக இல்லை. ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களிலும் தங்களுடைய பொறுப்பு வாய்ந்த பணியை உணர்ந்து செயற்படுவோர் சிலரே! எல்லாவற்றையும்விட இந்தக் குழந்தைகளைச் சுற்றியுள்ள உலகம் திருத்தமுறுதல் நல்லது. காரணம், இந்தக் குழந்தைகள் தாம் காண்பனவற்றைத் தான் முன் மாதிரியாக எடுத்துக் கொள்கின்றன.

நவம்பர் 14 குழந்தைகள் தினவிழா, குழந்தைகள் நலனுக்குரியன செய்வோம்! முறையாக வளர்ப்போம்! சீராக வளர வாய்ப்பளிப்போம்! இன்றைய குழந்தைகளின்–நாளைய தலைவர்களின் அறிவையும், ஆற்றலையும் முறையாக வளர்ப்பது நமது கடமை! நீங்காக் கடமை.

62. [1]உறுதி கொள்வோமாக

டாக்டர் அம்பேத்கார் அவர்கள் இந்திய வரலாற்றில் ஒரு மைல் கல். மனு, சாணக்கியன், திருவள்ளுவர் ஆகியோர் அரசியல் சட்டங்கள் இயற்றியுள்ளனர். இவர்களுள் மனுவும் சாணக்கியனும் இயற்றிய சட்டங்கள் நடுநிலை பிறழ்ந்தவை. வல்லாங்கு வாழ்வோருக்கே இவர்களுடைய சட்டங்கள் அரண்செய்தன. திருவள்ளுவர் இவர்களில் மாறுபட்டவர். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற பெருநெறி கண்டவர். ஆயினும் திருவள்ளுவர் எந்த ஓர் அரசயுைம் சார்ந்து ஒழுகாததால் திருக்குறள் ஆட்சியியல் தத்துவமாக, அரசியல் சட்டமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மேலும் மேலும் திருக்குறளில் இலக்கிய நலன்கள் செறிந்திருந்தாலும் திருக்குறள் பொது நெறி பேசியதாலும் வல்லாங்கு


  1. சிந்தனைச் சோலை