பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

481


தீமை நம்பிக்கையினால் விளைவதல்ல. நம்பிக்கை என்ற அகநிலைப்பண்பைத் தவறாகக் கடைப்பிடித்தொழுகினால் தான் தீமை விளையும். அதாவது நம்பிக்கை அறிவுக்கு முரணன்று. நம்பிக்கை தொடக்கநிலை; வாழ்க்கையின் முதல் அடி அடுத்த அடி காரண காரியங்களை ஆய்வு செய்தல். ஒவ்வோர் அடியாகத்தான் நெடுந்தொலைவைக் கடக்க வேண்டும். நம்பிக்கையென்னும் முதல் காலை ஊன்றி வாழ்க்கை நடைப் பயணம் தொடங்குகிறது. அடுத்த அடி காரண காரியங்களை ஆய்வு செய்து தெளிவு பெறுதல். பின் தெளிவைத் தேர்ந்த அறிவாக்கல். அதனைத் தொடர்ந்து முயற்சி தோன்றும். நம்பிக்கையும் முயற்சியும் ஒன்றையொன்று தழுவியன. நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சி தலையெடுக்காது. முயற்சியே நம்பிக்கையை உறுதிப் படுத்துவது.

நம்பிக்கை இல்லாத வாழ்க்கை நரகம். நம்பிக்கையின்மையே ஒழுக்கக்கேடுகளுக்குக் காரணம். நம்பிக்கை இல்லாத வாழ்க்கை வெறும் சூன்யம். நம்பிக்கை நமக்கு உடைமை; ஒளி நம்பிக்கையே அறிவுக்கு வழித்தடம். நம்பிக்கையே முயற்சிகள் சாதனை செய்யும் களம். நம்பிக்கையே மருந்தும், மந்திரமுமாகும்.

நம்பிக்கையின் தொடக்கம் தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை இழிவு மனப்பான்மையிலிருந்து விடுதலை செய்கிறது. தன்னம்பிக்கை கால்கொண்டவுடன் வாழ்நிலை உயர்தலுக்குரிய அனைத்து முயற்சிகளும் தலையெடுக்கும். நம்மால் முடியும் என்ற எண்ணத்தின் ஆற்றல் அளப்பரியது. இந்த நம்பிக்கையினாலேயே உலகில் பல சாதனைகள் நிகழ்ந்துள்ளன. தன்னம்பிக்கையுடையாரிடையே வாய்ப்புகள் பய னுடையவை ஆகின்றன. வாழ்க்கையின் முதலும் முடிவுமாக இருப்பது தன்னம்பிக்கையேயாம்.

அடுத்து, நம்பிக்கை பயிலும் களம் நட்பு. “முதலில் எதை நான் இதயபூர்வமாக நம்புகின்றேனோ அதையே