பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

543


களுக்குச் செல்வத்தின் மதிப்புத் தெரியாது. சில்லரைகளும் சேரச்சேர மூலதனமாகும் என்ற உண்மையை உணரமாட்டார்கள் வளர்ந்து விட்டநுகர்வுச் சந்தையில் இறங்கி மூழ்கிக் கடனாளியாகி விடுவார்கள்! கடனில்லாத வீடு காண்பதற்கு நமது நாட்டைப் பற்றியோ சொல்ல வேண்டாம். பன்னாட்டு மூலதனக் கடன்கள் நாட்டிலும் ஊடுருவி நமது மூலதானத்தில் அருமைப்பாட்டை அரித்துக் கொண்டிருக்கிறது. பண வீக்கம், விலைவாசி ஏற்றம், வேலையின்மை ஆகிய தீமைகளால் நாடு நாளும் உருக்குலைந்து வருகிறது.

நமது நாடு மக்கள் தொகை பெருகி வளர்ந்துள்ள நாடு. 90 கோடி மக்கள் வாழ்கின்றோம். இந்தத் தொண்ணூறு கோடி மக்களில் 30 கோடி பேர் எதற்கும் பயனற்றவர்களாக வெற்று மனிதர்களாக வாழ்கின்றனர். இல்லை, இல்லை! பிழைப்பு நடத்துகின்றனர். ஒரு முப்பது கோடி பேர் ஏதோ ஒரு வேலை செய்கின்றனர். ஆனால் வேலையின் பயன்பாடு என்ன என்று கேட்கமுடியாது. வேலையின் தரமும் அளவும் பயனும் கணக்கிட்டால் மனம் நிறைவுபெறாது. இந்த முப்பது கோடி பேர் பொறுப்புணர்வுடனும் கடமை உணர்வுடனும் தங்கள் கடமைகளைச் செய்தால் நாடு நகரும், நாடு வளரும். இந்த முப்பது கோடி பேரும் அறிவு ஜீவிகள், நாட்டை நடத்திச் செல்லும் உரிமையும் கடமையும் பூண்டவர்கள். இவர்களிடம் இன்று பொறுப்புணர்வு இல்லை. கடின உழைப்பு இல்லை. பயன்பாட்டு நலன் செறிந்த உழைப்பு இல்லை! ஏன்? சுரண்டல் குணம் வந்திருக்கிறது! அதனால் துணிவு இல்லை! தன்னம்பிக்கையும் இல்லை! கடைசியாக இருக்கும் முப்பது கோடி மக்கள் உழைப்பாளிகள்! அவர்களுடைய உழைப்பு பயன்படுகிறது. ஆம்! இந்த முப்பது கோடியில் பலரும் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடையவர்கள். நமக்குத் தெரிந்தவரையில் இவர்கள் உழைப்பில் குறைவிருப்பதாகத் தெரியவில்லை. எப்படி? நாட்டில் உணவுப் பஞ்சம் இல்லை! அதனால் உழவர்கள்