பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

45


விடும். ஒழுக்கம் நிறைந்த அறநெறியின் பாற்பட்ட சமுதாயத்தைக் காண-சமவாய்ப்புச் சமுதாயம்-சோஷலிஸ சமுதாயம் இன்றியமையாத ஒன்று. சோஷலிஸ் சமுதாய அமைப்பின் மூலமாகத் தனிமனித வாழ்க்கை நசித்து விடுமோ என்ற அச்சம் தேவையில்லை. தனிமனித வாழ்க்கையும் சமுதாய வாழ்க்கையும் மலரும் மணமும் போல. மலர் தனி மனிதனைப் போல-அதன் மணம் சமுதாயத்தைப் போல. மலரின் செழிப்பு மணத்திற்கு உண்டு. மனம் நின்று நிலவிப் பயன்தர மலரும் இன்றியமையாத ஒன்று. மலரினாலேயே மணம் வாழுகிறது; மணத்தினாலேயே மலர் சிறக்கிறது. தனிமனிதனாலேயே சமுதாயம் செழிப்படைகின்றது; சமுதாயத்தினாலேயே தனிமனிதன் சிறப்படைகின்றான். தனிமனிதனுடைய வாழ்வின் நசிப்பில் தோன்றுவதல்ல சமுதாய அமைப்பு.

தனிமனிதனை வளர்க்கவும், வாழ்விக்கவுமே சமுதாய அமைப்பு. தனி மனிதனுடைய வாழ்க்கை எவ்வளவு முக்கியமானதோ, அவ்வளவு முக்கியமானதுதான் சமுதாய வாழ்வும். தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் பொதுவாகச் சில ஒழுக்கத் துறைகளை வகுத்துக்கொண்டு போற்றிக் காப்பாற்றுவது முற்போக்கான கடமைகளில் ஒன்று.

தனிமனிதனின் சமுதாய நலனுக்கு மாறுபட்டதாகவோ தன்னிச்சைப் போக்குடையதாகவோ இருக்கக் கூடாது. அது போலவே, சமுதாயமும் தனிமனிதனின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறது. இங்கு சோஷலிஸ சமுதாய அமைப்பு என்பது பொருளியல் வழிப்பட்ட அமைப்புக்கேயாம். சிந்தனைக்கும் - உணர்வுக்கும் அல்ல. சோஷலிஸ சமுதாய அமைப்பின் தத்துவத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சிலர் வேண்டுமென்றே சோஷலிஸ சமுதாய அமைப்பைப் பகிரங்கப்படுத்தி மக்களிடம் காட்ட முயற்சிக்கின்றனர். சோஷலிஸ தத்துவம் அப்படி ஒன்றும் பயங்கர