பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மானதல்ல-அதைப் பார்த்து நாம் பயப்பட வேண்டியதுமில்லை. இன்றைய சமுதாய அமைப்பில் திறமையுடைய பலருக்கு வாய்ப்பில்லை; வாய்ப்பின்மையின் காரணமாகவே, நாட்டை வளமாக்கப் பயன்படக்கூடிய பலருடைய திறமை பாழ்பட்டுப்போகிறது. திறமையற்றவர்களிடத்தில் வாய்ப்புக்கள் குவிந்துள்ளன. இது எப்படி எனில், செவிடர்கள் அவையில் இசைக் கச்சேரியும், குருடர்கள் அவையில் வாண வேடிக்கையும் நிகழ்த்துவது போன்றதுதான். குருடர்கள் அவையில் இசைக்கச்சேரியும் செவிடர்கள் அவையில் வாணவேடிக்கையும் நிகழ்த்தினால் பயன் உண்டு. உழைப்பு பொருளைக் கொண்டுவரும் என்பது பொதுவிதி. ஆனால் இன்றோ, பொருள் உழைப்பை விலைக்கு வாங்குவதைக் காண்கிறோம். உழைப்பவன் உலருகிறான். உழைப்பைக் கொள்ளை கொள்ளுகிறவர்கள் வாட்டமின்றி வாழுகின்றார்கள். இந்நிலையை மாற்றுவதே சோஷலிஸ சமுதாயப் போக்கின் நோக்கம்; சோஷலிஸ தத்துவத்தின் விழுமிய பயன். இக்கருத்தினையே வள்ளுவப் பெருந்தகை “ஒப்புரவு” என்ற அதிகாரத்தில் தெளிவாக விளக்குகிறார். “உலகத்தோடு ஒட்ட ஒழுகலே ஒழுக்கத்தின் விதி” என்று அறுதியிட்டுக் கூறுகின்றார். சமுதாயத்தோடு ஒப்புரவாக ஒத்ததறிந்து வாழும்போது தனிமனிதனுக்குக் கேடுவராது. அப்படியே வருமாயினும், அது விரும்பி ஏற்றுக் கொள்ளத்தக்கதே என்று பேசுகின்றார்.

“ஒப்புரவி னால்வரும் கேடெனில் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து”

–குறள் 220

என்பதே குறள்.

சோஷலிஸ சமுதாய அமைப்பின்மூலம், தனி மனிதனின் சிந்தனைகளுக்கோ, அல்லது தார்மீக வாழ்வுக்கோ எந்த விதமான ஊறும் விளைவதற்கு வழியில்லை. ஆதலால், இன்றைய உடனடியான நம்முடைய கடமை