பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

47


சோஷலிஸ சமுதாயத்தை அமைப்பதேயாகும். இத்தகைய ஒரு சமுதாயத்தின் இன்றியமையாத தேவையை இற்றைக்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னமேயே கம்பன் வலியுறுத்தியிருக்கிறான்.

“தெள்வார் மழையும் திரை
ஆழியும் உட்க நாளும்
வள்வார் முரசம் அதிர்
மாநகர் வாழும் மக்கள்
கள்வர் இலாமைப் பொருள்
காவலும் இல்லை; யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்
பார்களும் இல்லை மாதோ!”

என்று பேசுகின்றான்.

இது கம்பன் கண்ட இராமநாடு. தசரத இராமனைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஏன் இத்தகைய நாட்டைக் காண மனம் வரவில்லையோ தெரியவில்லை.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து எல்லார்க்கும் எல்லா வாய்ப்புக்களையும் வழங்குகின்ற சோஷலிஸ சமுதாய அமைப்பை மனமார விரும்பி நடை முறை வாழ்க்கையில் கொண்டுவர விரும்புகின்றவர்களுக்கே வாக்காளர்கள் தங்கள் ஆதரவைக் கொடுத்துதவ வேண்டும்.

தனி மனித வாழ்க்கையாயினும் சரி, சமுதாய வாழ்க்கையாயினும் சரி திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலமே முன்னேற்றம் காணமுடியும். “திட்டமில்லாத வாழ்க்கையைத் தேவனாலும் காப்பாற்ற முடியாது” என்ற பழமொழி நினைவிற் கொள்ளத்தக்கது. நடைமுறைக்கு ஒவ்வாத பழக்கவழக்கங்களின் காரணமாகவும், அடிமை வாழ்வின் காரணமாகவும் இந்த நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னர் திட்டமிட்ட முன்னேற்றங்கள் கிடையா. இந்த நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, ஆளும் உரிமையை நம்முடைய