பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாக்குகளின் மூலம் பெற்ற காங்கிரஸ் கட்சி தேசத்தின் முன்னேற்றத்தைத் தொழிற் புரட்சியின் மூலமே காண முடியும் என்ற நம்பிக்கையுடன் ஐந்தாண்டுத் திட்டத்தையும் மக்கள் முன்னே வைத்திருக்கிறது. ஆளுங்கட்சியின் ஐந்தாண்டுத் திட்டங்களைப் பொறுத்தவரையில், பழமை விரும்பும் கட்சிகளைத் தவிர, ஜனநாயக வாக்காளர்களின் நலன் விரும்பும் கட்சிகளின் கருத்துக்கும், ஆளும் கட்சியின் கருத்துக்கும் இடையே வேறுபாடுகள் அதிகமில்லை. திட்டமிட்ட முன்னேற்றத்தை விரும்புகிறவர்களுக்கும், திட்டங்களைச் செயற்படுத்தும் திறனுடையவர்களும், திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் விளையும் பலன்களை அதை நிறைவேற்றும், இந்த நாட்டு மக்கள் அனைவருமே அனுபவிக்க ஒழுங்குபடுத்துகிறவர்களுக்குமே வாக்காளர்கள் வாக்குகளைத் தந்துதவ வேண்டும். அடுத்து, இன்றைய வாக்காளர்களிடத்தில் எழுப்பப் பெற்றுள்ள ஒரு பெரிய பிரச்சனை வாழ்க்கையின் இன்றியமையாத அன்றாடத் தேவைப் பொருள்களின் விலை ஏற்றம், விலைவாசி ஏற்றத்திற்குக் காரணம் உற்பத்திக் குறைவு என்று கூறுவது நிறைவுடைய கருத்தாகாது. உற்பத்தி பெருகியிருப்பதைப் புள்ளி விவரங்கள் தெளிவாக விளக்குகின்றன. தேசிய வருமானமும் கணிசமான அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இவ்விரண்டிலும் எவ்விதமான குறைவும் ஏற்பட்டு விடவில்லை. ஆனாலும், சோஷலிஸ சமுதாய அமைப்பை ஒத்துக்கொள்ளாத தன்னலச் சார்புடைய பிற்போக்குச் சக்திகள் இன்னமும் நாட்டில் வலிவுடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அவற்றின் காரணமாக தேசிய வருமானம் உயர்ந்த அளவிற்குச் சராசரி மனிதனின் வருமானம் உயரவில்லை. பொதுநலனை மனத்தில் கொள்ளாதவர்கள் வருமான உயர்வைத் தம் வழிப்படுத்திக் கொண்டுள்ளனர். விலைவாசி ஏற்றம் ஒன்றும் கடுமையானதல்ல. ஆனால், மக்களின் வாங்கும் சக்தி குறைவாக இருப்ப