பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசு



189


உலகம்-அதாவது, இப்பொழுது புது உலகத்திலே, மேல் தட்டிலே இருக்கிறவர்கள் கடன் வாங்கவில்லையென்றால் அது கேவலம் என்று கருதுகிற காலம். பழங்காலத்திலே கடன் வாங்குவது கெளரவக் குறைச்சல்.

இப்பொழுதெல்லாம் ‘எனக்கு அந்த பாங்கிலே ஓவர் டிராப்ட்’ என்று சொன்னால், ஓஹோ! இரண்டு மூன்று பாங்கிலே ஓவர் டிராப்ட் வைத்திருப்பதனாலே பெருமையான ஆளே தவிர சிறுமையான மனிதர்கள் அல்ல!

ஆதலினாலே வள்ளுவர் சொன்னார்,

‘தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.’

436

என்று. எப்பொழுதும் நாட்டிலே நடக்கின்ற குற்றங்களுக்குத் தன்னுடைய அரசு, தன்னுடைய ஆட்சி சார்பாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

‘வேந்தனும் அல்லவை செய்யான்’

இது புறநானூற்றுப் பாடல்.

ஒருவருக்கு எழுபது ஆண்டுகள் கழித்தும் தலை நரைக்கவில்லையாம். பெரிய அதிசயம் அந்தக் காலத்திலே! இப்பொழுது நமக்கு அதிசயமே இல்லை ஏன் எனில் இளமையிலேயே நிறையப் பேர் கிழவர்களாகி விடுகிறார்கள். அவர்களுக்கு நரை, திரை, மூப்பு வந்து விடுகின்றன. அந்தக் காலக் கிழவன் ஒருவனுக்கு எழுபது ஆண்டுகள் ஆகியும் நரை தோன்றவில்லை.

‘யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்காகியர்’

என்று கேள்வி கேட்கிறார்.

சில வீடுகளில் மிகவும் பரபரப்பே இருக்கும். அரிசிப் பானையிலே உலை கொதிப்பது போல் பரபரப்பும் இருக்கும்.