பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

103



ஆனால் இன்று நண்பர் யார்? வேண்டியவர் யார்? உறவினர் யார்? தெரிந்தவர் யார்? பகைவர் யார்? என்றெல்லாம் எளிதில் இனம் கண்டுகொள்ள முடிவதில்லை.

இன்று மனித உறவுகளின் அருமைப் பாட்டை உணர்ந்து பழகுவோர் அருகிவிட்டனர். எங்கும் இலட்சிய அடிப்படையிலான உறவு இல்லை! தோய்ந்த அன்பும் இல்லை! எல்லாம் இலாப நோக்கு!

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்பவர்களைவிட, இலாப நோக்குடைய சந்தர்ப்பவாதிகளைவிட, பகைவர்கள் ஆயிரம் மடங்கு நல்லவர்கள்!

பகைவர் யார்? அதற்கும் இலக்கணம் உண்டு. நல்ல பகைவர்கள் வெளிப்படையாக எதிர்த்து நிற்பார்களே தவிர, சூது செய்ய மாட்டார்கள்! துரோகமும் செய்ய மாட்டார்கள்! எந்தக் காரணத்தை முன்னிட்டும் மறைந்தும் மறைத்தும் ஒழுக மாட்டார்கள். இன்று இத்தகு நலம் செறிந்த பகைவர்களைக் காண இயலவில்லை.

இன்று மலிந்து வருவது “சின்னப்புத்தி”. இந்த சின்னப் புத்தியுடையவர்கள் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளவே முயற்சி செய்வர். இவர்களிடம் திறந்த மனமும் இல்லை! திறந்த வாழ்க்கையும் இல்லை! சூது நிறைந்தவர்களாக இருப்பர். நேரில் நண்பராக நடிப்பர்; உறவினராக மேவிப் பழகுவர்! எல்லாம் நாடகமேயாம்!

சின்னப் புத்தியுடையோர் இடர் உற்றுழி இடறி விடுவர். வீழ்ந்த இடத்தில் குழி பறிப்பர்! இவர்களிடத்தில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். பகைவர்களைவிடக் கூட இந்த வங்கு மனம் கொண்ட நாய்கள் தொல்லை தர முயலும். ஆதலால் வாழ்க்கையில் வெற்றிகளைப் பெற அல்லது பொருளைப் பொருதொழிய நட்போ, பகையோ