பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

322

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


போடாமைப் போட்டி ஆகிய போட்டிகள் வைத்து மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கலாம்.

சங்க காலத்திலேயே-அதாவது போர் செய்வது அரசனின் ஒழுகலாறு என்று இருந்த காலத்திலேயே ஒளவையார், அதியமான்-தொண்டைமானின் போரைத் - தவிர்க்கத் தூது போனார். ‘சமாதானம் செய்து வைப்பவர்கள் பாக்கியவான்கள்’ என்று சமய நூல்கள் அனைத்தும் ஒருமுகமாகக் கூறும்.

கம்பன் இராமகாதை வாயிலாக இராவணனின் உறவுச் சுற்றம் மூலமாகப் போரைத் தவிர்த்திருக்கும்படிக் கூறுகின்றான். இராமனுக்குப் போர் இலட்சியமன்று. சீதையை மீட்பதுதான் இலட்சியம்! சீதையை இராவணன் விடுதலை செய்திருந்தால் இராவணன், சீதையை நினைத்ததும், எடுத்ததுமாகிய குற்றத்தை இராமன் மன்னித்திருப்பான் என்று மாலியவான் கூறுகின்றான். ஆனால், இராவணன் மறுத்துவிட்டான்.

தமிழில் வழங்கும் ஒப்பற்ற காவியங்களாகிய இராம காதை பெண்ணின் காரணமாகவும், பாரதம் நிலத்தின் காரணமாகவும், கந்தபுராணம் ஆதிக்கத்தின் காரணமாகவும் நடந்த போர்களைக் கூறுகின்றன. இராம-இராவணப் போரில் இராவணன் இராமனால் கொல்லப்பட்டான்! பாரதப் போரில் துரியோதனாதியர் அழிந்து போயினர். கந்தபுராணத்தில் சூரபதுமன் திருத்தப்பட்டு வாழ்விக்கப் படுகின்றான்.

அழித்தல் அறமன்று. திருத்தப்படுதலும் வாழ்விக்கப் படுதலுமே அறம். தமிழ் மரபு. ‘ஆழ்க தீயதெல்லாம்’ என்பதுதான். இந்த கந்தபுராண மரபு பின்பற்றப்பட்டால் போர் ஒடுங்கும்; புவி வளரும். இரண்டாவது உலகப்