பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.







18


கம்பன் கண்ட பொதுமைச் சமுதாயம்


கம்பன், காப்பியம் செய்ய எடுத்துக் கொண்டது பழைய வரலாறு. ஆனால் கம்பன் புதுமையும், பொதுமையும் விரும்பிய கவிஞன், கம்பனுக்கு முன் தோன்றிய இலக்கியமெல்லாம் உடைமைச் சமுதாயத்திற்கு அரண் செய்தவைகளேயாம். மனித உலகத்தில் முதன் முதலாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் உடைமைச் சமுதாயத்திற்கு எதிரான கருத்தை மாமுனிவர் மார்க்சு காண்கிறார். ஆனால் கம்பன் மார்க்சுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சிந்திக்கத் தொடங்கிவிட்டான். முடியுடைய அரசைப் பற்றிக் காப்பியம் செய்யும் கம்பன், உடைமைச் சமுதாயத்திற்கு எதிராகவும் சிந்தித்திருக்கிறான். இது கம்பனிடத்திலிருந்த துணிவைக் காட்டுகிறது. காப்பியம் முழுவதிலும் கம்பன் பல சமுதாய மாற்றங்களைக் கோடிட்டுக் காட்டுகிறான். கண்ணை மூடிக்கொண்டு அவன் அயோத்தியைப் போற்றிடவுமில்லை; இலங்கையை இகழ்ந்து விடவுமில்லை. இன்று எல்லாத் துறையிலும் சமூகம் வளர்ந்திருக்கிறது. ஆனாலும் தகுதிகளுக்கு ஏற்பப் பாராட்டு-ஆய்வு என்ற மனப்போக்கு இன்னமும் வளர்ந்த பாடில்லை. ஆட்டு மந்தைகளைப் போலக் குருட்டுத்தனமாக,