பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

189


இங்ஙனம் அவையும் நெஞ்சத்தை ஊஞ்சலுக்கு உவமை காட்டுகிறார் அப்பரடிகள், ஊஞ்சல், மரத்தில் கட்டப் பெற்றிருக்கிறது. உயிரியல், வாழ்க்கையென்ற மரத்திற் கட்டப் பெற்றிருக்கிறது. ஊசற்பலகையை மரத்தோடு இணைப்பன இரண்டு கயிறுகள். உயிரை வாழ்க்கையோடு இணைப்பன ஆசை, பாசம் என்ற கயிறுகள். ஊஞ்சல் புறப்பட்ட இடத்திலிருந்து முன்னே செல்லும்; பின்பு புறப்பட்ட இடத்திற்கு வரும்; திரும்ப ஏகும், வரும்; இடை உலவும். இந்த ஊஞ்சலின் இயக்கத்தோடு நெஞ்சை உவமித்தது சிந்தனைக்குரிய விருந்து.

உறுகயி றூசல்போல் ஒன்றுவிட் டொன்று பற்றி
மறுகயி றூசல் போல வந்துவந் துலவு நெஞ்சம்
பெறுகயி றூசல் போலப் பிறைபுல்கு சடையாய் பாதத்
தறுகயி றூரசலானே னதிகை வீரட்டனீரே!

என்பது பாடல்.

“ஊசல் பூத்த உளம்” என்று பிரபுலிங்கலீலை பேசுகிறது. ஒன்றுவிட்டு ஒன்றுபற்றி வந்துலவும் நெஞ்சத்திற்குக் கயிறூசல் ஒப்பு. முதன் முறையாகத் தன் நிலையை விட்டுச் சென்று பிறிதோரிடத்தைப் பற்றுவது ‘உறுகயிறு சல்’. பற்றிய அவ்விடத்தை விட்டு மீண்டு, தொடங்கிய நிலைப்பக்கம் வருவது மயிகயிறூசல்; அந்நிலையை விட்டு மற்றொரு பக்கம் சென்று பற்றுவதும் அதைவிட்டு மீள்வதும் அவ்விரண்டு ஊசலேயாகும். இடையில் வந்து உலவும்பொழுது வாசற் கயிறு முறுக்கு அவிழ்தல் உண்டு. முறுக்கு ஏறுதல் உண்டு.

“உறுகயிறுாசல்” ஆகும் பொழுது கயிறு முறுக்கேறியும், திரும்ப மறுகயிறுாசல் ஆகும் பொழுது முறுக்கவிழ்ந்தும் ஒருவழிப்படாமல் பிறர் வழிகளில் கயிறு இயக்கப்படுவதால் கயிற்றின் வலிமை தளர்ந்து தாங்கி நிற்கும் இயல்பை இழந்து “அறுகயிறூசல்” ஆகிறது. அது போல அவா மிகுதியினால் நாடி நரம்புகளில் முறுக்கேறி ஒன்றை நாடியும் அதனை