பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செல்வாக்குமில்லை; உரிமையுமில்லை. உயிர்களுக்கும் பொறிகளுக்கும் உள்ள உறவு தற்காலிகமானதே.

அதனைத்தான் அடிகள், “ஐவருக்கு ஒற்றி வைத்தாய்” என்று பாடுகின்றார். ஒற்றி அனுபவம் பொறிகளுக்கு முழு உரிமையைத் தராது. பொருளுக்குரியவர் பொருளைக் கேட்கும்பொழுது பொருளைத் திரும்பத் தரவேண்டும். உயிருக்கு உரிய நாயகன் இறைவனே. உயிருக்கு உடையவனாகிய நாயகன் உயிர்களைப் பக்குவப்படுத்துவதற்காகப் பொறிகளிடத்தில் ஒற்றிவைக்கிறான். பின்னே, உரிய பொழுது மீட்டுக் கொள்கிறான்.

திருவாளன் திருநீறு, திலகவதியார் தர, சிவநெறிக்கு அடிகள் வருவதற்கு முன்பிருந்த நிலையை ஒற்றிக்காலமென அடிகள் பாடுகின்றார். பின், திருவதிகையில் ஆட்கொண்ட மையை ஐவரிடமிருந்து ஒற்றி மீட்டதாகப் பாடுகின்றார். இப்படி முன்னர்க் கட்டுண்ட நிலையில் கிடந்தபொழுது, ஆட்கொண்டு உடைமைக்காரனாகிப் பிறப்பருளி ஐவருக்கு ஒற்றி வைத்து ஒற்றி மீட்டுத் திருவதிகையில் ஆட் கொண்டமை நாடறியும். ஆதலால், உடையவனாக ஏற்றுக் கொண்டமையை இனி மறைக்கவோ மறுக்கவோ முடியாது. ஆதலால், அருள் புரிக என்று பாடுகின்றார்.

ஏன்றுகொண் டாயென்னை யெம்பெரு மானினி
யல்லமென்னில்,
சான்றுகண் டாயில் வுலகமெல் லாந்தனி
யேயென்றெனை -
ஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத் தாய்பின்னை
யொற்றியெல்லாம்
சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப மேய
சுடர்வண்ணனே!

என்பது அப்பர் பாடல்.