பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தருமோ இவள் உள் மெலிவே

என்று வேண்டிப் பதிகம் அருளிச்செய்கின்றார். இப்பதிகத்தினை ஓதுவார் எவர் நெஞ்சும் உருகும். இப்பதிகத்தில் பெருமான் அமரர்கள் சாவாமல் காக்க நஞ்சுண்டு கறைக் கண்ட முடையானாக - நீலகண்டனாக ஆய வரலாற்றை நினைவுகூர்ந்து ‘நீலகண்டமுடையாய்’ என்று பாடுகின்றார். ஆலகால நஞ்சையே யுண்டு கண்டத்தில் அடக்கிய நீ, இந்த இளைஞன் சாவதற்குக் காரணமாய நச்சுப் பாம்பின் நஞ்சைக் கெடுத்து அருளுதல் எளிதே என்ற பொருள் தோன்றப் பாடுகின்றார். திருஞானசம்பந்தர் தம் வயமாக்கிக் கொண்ட திருவருள் ஞானம், அந்த இளைஞனை உயிர்ப்பித்தது. இளைஞன் எழுந்தான். இளங்காதலர்கள் முகங்களில் புன்முறுவலைக் கண்டு மகிழ்ந்து திருமணம் செய்துவைத்தார் திருஞானசம்பந்தர். அதற்குப் பிறகுதான் திருமருகல் திருக்கோயிலுக்குச் சென்றார். அன்று நடந்த இந்த வரலாற்றின் மாட்சிமையுடன் இன்றையப் புன்மையை எண்ணி வேதனைப்பட வேண்டியிருக்கிறது. திருஞானசம்பந்தரின் அருட்பாடல்கள்தான் நமக்கு வழிகாட்ட வேண்டும்.

திருஞானசம்பந்தரின் தமிழ் அருமையானது; எளிமையானது; ஆயினும் பொருள் பொதித்தது. அவர் திருச்சிராப்பள்ளியில் அருளிச்செய்த பதிகத்தில் இறைனை

நன்றுடை யானைத் தீயதில் லானை

என்று தொடங்கிப் பாடிப் பரவுகின்றார். ‘நன்றுடையானை’ என்றாலே போதும், ‘தீயதில்லானை’ என்று எதிர்மறையாகவும் அருளிச் செய்தது ஏன்? இந்த அடிகள் ஆழ்ந்த சிந்தனைக்குரியன. நம்மில் பலர் ‘நன்று’ என்று கருதிக் கொண்டிருப்பது உண்மையில் நன்றன்று. நன்று என்றால்