பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கற்றுக் கொள்ள வேண்டும். சுவைத்தனவே சுவைக்க விரும்புதல் நெஞ்சத்தினியல்பு. அங்கனம் மாறாது சுவைக்கத் தக்கன, நன்றுடையான் திருத்தாள்களேயாம். சுவைப் பொருள் மாறாது போனாலும் சுவைத்தற்குரிய நோக்கம் மாற வேண்டும். இதனை,

எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின் றேனையும் சூழ்ந்துகொண்டு
உழுத சால்வழி யேயுழு வான்பொருட்டு
இழுதை நெஞ்சம் என்படு கின்றதே

என்ற அப்பர் திருப்பாட்டால் அறியலாம்.

அப்பரடிகள் ஞான வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் நம்மனோரையும் ஞான வாழ்க்கை வாழத் துண்டுகிறார். நல்ல வாழ்க்கையை - உழவுத் தொழிலோடு உருவகம் செய்து காட்டிப் படிப்பிக்கின்றார். -

மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப்
பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையுள் நிற்ப ராகில்
சிவகதி விளையு மன்றே

.

வேளாண்மைக்கு உழவு இன்றியமையாதது. அது போலவே ஞான வாழ்க்கைக்கு மெய்ம்மை உழவைச் செய்ய வேண்டும். மெய்ம்மை என்பது வெளிப்படையாக மெய்ம்மை, வாய்மை, உண்மை என விரிந்து விளங்கும் மூன்றையும் குறிக்கும். மெய்ம்மை உடலாற் செய்வது; வாய்மை யென்பது வாயினாற் கூறுவது. உண்மையென்பது உள்ளத்தில் நினைப்பது. இம்மூன்றையும் ஒரு சேரக் கடைப் பிடிப்பதே முழுநிறை மெய்ந்நெறி. மெய்ம்மை, வாய்மை,