பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் – ஒரு நாகரிகம்

105


உரியது; மானுடத்தின் சிந்தனை எல்லையில் முகிழ்ந்தது; அறிவியலுக்கு இசைந்த பெருநெறி. உலக இயக்கத்திற்கும் மூன்று பொருள்கள் அடிப்படையானவை என்று கொண்டு வாழ்க்கை நியதிகளை முறைப்படுத்திய நெறி சைவம். உயிர்களின் இன்பதுன்பங்களுக்கு உயிர்களே காரணம் என்ற உயர் கொள்கை சைவத்தின் சிறப்பு.

மண்ணின் நல்ல வண்ணம் வாழ வேண்டும் என்பது சைவத்தின் கொள்கை புன்மை நிறைந்த சாதிச் சழக்குகளி லிருந்து விடுதலை பெற்றது சைவம், ஈந்து உவந்து வாழும் ஒப்பற்ற ஒப்புரவு நெறி சைவத்தின் கோட்பாடு. ஆரவாரச் சடங்குகளிலிருந்து வில்கி இறைவனை மனக்கோயிலில் எழுந்தருளச் செய்து நினைந்து மகிழ்ந்து வாழும் நெறியே சைவநெறி. சைவத்தின் சீலம் பொருள்களினின்றும் விலகியதல்ல. பொருள்களின் ஊடே கடுகிய பற்றும் தற்சார்பின்மையே சைவத்தின் சீலம், இன்னோரன்ன சிறப்புக்களால் சைவம் வாலிதாயிற்று. -

தொண்டினைத் தொடர்வோமாக!

இத்தகு சிறப்புமிகு குலச்சிறை நாயனார் நின்ற நெறியினைப் போற்றும் வகையில் நாம் செந்தமிழையும் சிவ நெறியையும் இரண்டு கண்களெனப் போற்றி வாழ்வோமாக செந்தமிழ் வழக்கு அயல்வழக்கின் துறை வென்று விளங்க, நாமும் குலச்சிறை நாயனார் இயற்றிய தொண்டினையே பற்றுக் கோடாகக் கொண்டு திருத்தொண்டு செய்வோமாக!