பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி 304


விரும்பி, தங்கித் தவம் செய்ய ஒருப்பட்டார்.தந்தையும், தாயும் சங்கிலி நாச்சியாரை வணங்கி விடை பெற்றனர்.

சங்கிலியார் திருமணம்

சங்கிலி நாச்சியார் திரு ஒற்றியூரில் திருமாலைப் பணிவிடை செய்து தவம் செய்கிறார். திருஒற்றியூருக்கு வந்த நம்பியாரூரர் திருக்கோயிலுக்குள் சென்று வணங்கி மகிழ்கின்றார். அன்றைய திருக்கோயில்களில் தொண்டு செய்யும் தொண்டர்கள் நிரம்பியிருந்தனர் என்று தெரிய வருகிறது. "தொண்டு செய்வார் திருத் தொழில்கள் கண்டு தொழுது” என்ற சேக்கிழார் வாக்கு பண்டைய மரபினை நினைவூட்டுகிறது. தொண்டு செய்வார் திருக் கோயிலுக்குள் யாண்டும் பரவித் தம் தம் நிலைக்கேற்பத் திருத்தொண்டுகள் செய்து வந்தனர். திருக்கோயில் வணங்கிச் செல்வோர் திருக்கோயிலில் செய்யப் பெறும் திருத்தொண்டுகளையும், திருத்தொண்டர்களையும் தொழுது செல்லுதல் மரபு. நம்பியாரூரரும் நல்லூழ் வந்து கூட்ட திருமாலை மண்டபம் போந்தருளினார். அங்குத்தவ அரசர், தவச்செல்வி சங்கிலியாரைக் கண்டார்.

நம்பியாரூரர் மனம் காதல் வழிப்பட்டது. இக் காதலின் சான்றாண்மை குறித்து ஆய்வு செய்து கொள்கின்றார் நம்பியாரூரர்; தம் நிலை உணருகின்றார். அருளால் அடைந்த பிறவியை எண்ணுகின்றார். நம்பியாரூரர் காதல் வழிப்பட்ட வருத்தத்திற்கு ஆளானார் ஆயினும் சங்கிலியார் மேற் கொண்டுள்ள தவத்தால் அவரை எளிதில் அடையத்தக்க தாயில்லை. நம்பியாரூரர் திருஒற்றியூர் ஈசன்பால் கேட்டுப் பெறத் துணிந்தார். திருஒற்றியூர் ஈசனிடம் "சங்கிலியைத் தந்து என்வருத்தம் தீரும்' என்று விண்ணப்பித்தார்.

நம்பியாரூரர் வருத்தம் தீர்த்தருளுவது திருஒற்றியூர் இறைவனது கடமை. சங்கிலியார் முன் இறைவன் தோன்றி