பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. திருமுறை பயிலும் மாணவ மாணவியர்களுக்குப் பரிசில்கள் வழங்கிக் கற்கும் ஆர்வத்தைத் தூண்டுதல்.
4. புதிய வகுப்புகள் திட்டமிட்டுத் தொடங்குதல்.
5. திருமுறைச் சமயப்பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், ஆசிரியர்களுக்குப் பரிசில்கள் வழங்குதல்.
(ஆ) 1. திருக்கோயில் திருமடத்தில் சரியைத் தொண்டில் (திருவலகு திருமெழுக்குப் பணிப்பெண்) ஈடுபட்டிருப்பவர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், அவர்களுடைய நலனுக் குரியன நாடுதல்.
2. சரியைத் தொண்டுக்கு உரிய கருவிகள் வாங்குதலும் சீரமைத்தலும், (திருவலகு, ஒட்டடைக் கம்பு, ஏணி, குப்பை தொட்டிகள், குடம், வாளி, சவுட்டுப்பு........).
16. கணம்புல்ல நாயனார். (19) (47) கார்த்திகை - கார்த்திகை (1) திருக்கோயில்-திருமடம் திருவிளக்கு எண்ணெய்த் தேவைக்குத் திட்டமிடுதல்.
(2) தேவைக்குரிய எண்ணெயைப்பெற இலுப்பைத் தோப்புகள் வளர்க்கத் திட்டமிடுதல்.
(3) இலுப்பைத் தோப்புகளை வளர்த்தல்-பராமரித்தல்.