பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தோறும் பெரியபுராணத்தை ஒதும் பழக்கம் மேற்கொண்டால் மலம் மடங்கும்; மனம் கரையும்; அருள் முகிழ்க்கும்; சங்கரன்தாள் சார்பு கிடைக்கும்.

பெரியபுராணம்-வரலாறு

சேக்கிழார், திருத்தொண்டத்தொகையை முதல் நூலாகக் கொண்டு அந்நூலினின்றும் தொடங்கித் திருமுறைகள், திருக்கோவிற் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், சீர்சால் சாசனங்கள் ஆகியவற்றிலிருந்து அகச்சான்றும், செவி வழிச் செய்திகளாலமைந்த புறச்சான்றும் தேடி முறையான-குறைவிலா நிறைவுசேர் வரலாற்று நூலாகத் தமது பெரிய புராணத்தைச் செய்து தந்துள்ளார். பெரியபுராணத்தில் பேசப்பெறாத செய்தியில்லை; பத்தியென்ற ஆதாரசுருதியை அடிப்படையாகக் கொண்டு மனித குலத்திற்குத் தேவையான அனைத்துச் செய்திகளும் பேசப்பெற்றுள்ளன. சேக்கிழார் பெருமான் சிந்தையின் நிறைவையே அளவுகோலாகக் கொண்டு, "திரு நின்ற செம்மையுடையோர்” வரலாற்றை வகைபட விரித்துச் செய்துள்ளார். சமுதாயத்தின் அனைத்து மட்டத்திலும் அரனடிக்கு அன்புபூண்டு விளங்கிய அனைத்துப் பெருமக்களின் வரலாற்றையும் எந்தவித வேறு பாடுமின்றி இயல்புற எடுத்துக் கூறியிருக்கிறார்.

பெரியபுராணம் கடவுளைப்பற்றிப் பாடவில்லை; அது போலவே மனிதரைப்பற்றியும் பாடவில்லை! அடியார்க் கெளியராக விளங்கிய கடவுளையும், கடவுளுக்குத் தொழும்புபூண்டு கடவுளைத் தமது திருவுள்ளத்தில் எழுந்தருளச் செய்துகொண்ட அடியார்பெருமக்களைப் பற்றியுமே சேக்கிழார் பாடினார். அஃதாவது, அடியார் வழிபட்ட கடவுளையும், கடவுள் வழிப்பட்ட அடியார்களையுமே பாடினார். கயிலாயத்தின் உச்சியிலுள்ள இறைவனைப் பாடாமல் ஆரூர்த் திருவீதியில் நடந்த அண்டர் நாயகனையும், அருள்நிறை தில்லையில் அம்மை காண ஐந்தொழிற்