பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104/குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

தாயார் சீனியர் கேம்பிரிட்ஜூம், புலவர் தேர்வும் படித்தவர். என் உரிமையுணர்ச்சிக்கு என் தாய் தான் காரணம். இளமையிலிருந்தே எளிதில் உணர்ச்சி வசப் படும் நான், யாழ்ப்பாணத்தில் ஜூனியர் கேம்பிரிட்ஜ் படித்துக் கொண்டிருந்த போது, புத்தகத்தைக் கல்லூரி முதல்வர் முகத்தில் விட்டெறிந்துவிட்டுக் கல்வியை முடித்துக் கொண்டவன்.

கண்டியில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. அது சிங்களவருக்கும் பத்தினிக் கோட்டம். அதற்குப் பக்கத் தில் ஒரு மசூதி உள்ளது. கோயிலும் மசூதியும் அரு கருகே இருந்த காரணத்தால் இந்து-முஸ்லீம் சச்சரவு அடிக்கடி எழுவது வழக்கம். ஒரு முறை அது பெரிய கலவரமாக மூண்டுவிட்டது. அதில் எனக்கும் முக்கியப் பங்குண்டு. அந்தக் கலவரத்தில் 200 இசுலாமியர்கள் கொல்லப்பட்டனர்; சில இந்துக்களும் சிங்களவர்களும் உயிரிழந்தனர். திரு. இராமநாதன் இலண்டன் சென்று வாதாடி எங்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார். என்றாலும் நான் நாடு கடத்தப்பட்டேன்.

நாடு கடத்தப்பட்டதும் நான் நேராகத் தமிழகம் வந்து நாகப்பட்டினத்தில் தங்கினேன்.ஆறு மாதங்கள் கழித்து ஒருமுறை கள்ளத்தோணியில் இலங்கை சென்று திரும்பி வந்தேன். என் மாமா அப்போது ரூ. 8000/- கொடுத்து, * இதை வைத்துக்கொண்டு தமிழ் நாட்டிலேயே ஏதா வது தொழில் செய்து பிழைத்துக்கொள்' என்று அறி வுரை கூறினார். அப்பணத்தை எடுத்துக்கொண்டு இந்திய நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்தேன்.

1942 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் நான் பாவேந்தரை முதன் முதலில் சந் தித்தேன்.பெரியாரின் சுயமரியாதைச் சிந்தனைகளைக் கேட்டு அவ்வியக்கத்தின்பால் அதிக ஈடுபாடு கொண்டி ருந்தேன்.பாவேந்தரின் புரட்சிக் கவிதைகளைப் படித்துப் பாராயணம் செய்தவன் நான். பாவேந்தரின் எடுப்பான