பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t- . முருகுசுந்தரம், 19

ஒருநாள் புதுச்சேரி பெருமாள் கோவில் தெருவில் உள்ள அவர் வீட்டுத் திண்ணையில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு பாவேந்தர் அமர்ந்திருந்தார். ஒருவன் கூடை யில் முட்டை விற்றுக் கொண்டு வந்தான்.

'ஏய்...முட்டை இங்க வா!' என்று கூப்பிட்டார் பாவேந் தர். முட்டைக்காரன் வந்தான். ×

"கூடையில இருக்கற எல்லா முட்டையும் என்ன விலை? என்று கேட்டார். ஐந்து ரூபாய் என்று அவன் பதில் சொன்னான்.

4 உருபா 15 அனா கொடுப்பியா?" என்றார் இவர். அவன் சரி என்றான். முட்டையெல்லாம் நடையிலே அடுக்கு! பழனியம்மா! முட்டைக்காரனுக்கு 4உருபா 15 அனா கொடுத்துட்டு முட்டையெல்லாம் எடுத்துவை!" என்று பாவேந்தர் கட்டளையிட்டார். இது அவர் சுபா வம். ஏன் என்று யாரும் கேட்கக் கூடாது; கேட்கவும் (Ipią ułíTŠH -

ஒருவன் மூங்கில் கட்டு ஒன்றைப் பாதையில் தூக்கி விலை கூறி விற்றுக் கொண்டு வருகிறான் என்று வைத் துக்கொள்ளுங்கள். விலை கேட்பார் பாவேந்தர். அவன் 12 உருபா என்றால் இவர் 11: உருபாவுக்குக் கேட் பார். அவனும் கொடுத்துவிடுவான். அந்த மூங்கில் தற் போது வீட்டுக்குத் தேவையா? என்று நினைக்கமாட் டார். மனைவியைக் கூப்பிட்டுப் பணம் கொடுக்கச் சொல்லுவார். மனைவி பழனியம்மாள் இப்போது எதற்கு மூங்கில்?’ என்று கேட்டால், "...ச்சீப்...ச்சீப்” என்பார். அதற்குமேல் அவரை எதிர்த்து ஒன்றும் பேசக் கூடாது.

பாவேந்தர் மிகச்சிறந்த நகைச் சுவை ரசிகர். யாராவது நகைச்சுவையாக எதையாவது சொல்லிவிட்டால் உடம்பு குலுங்க விழுந்து விழுந்து சிரிப்பார். அவருடைய எழுத் தில் வீரச்சுவையும், நகைச்சுவையுமே விஞ்சி நிற்கும்.