பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

> முருகுசுந்தரம் 39

படம் எடுப்பதற்குச் சேலம் மோகினி பிக்சர்ஸ் நிறுவனத் தார் முயற்சி செய்து கொண்டிருந்த நேரம். இளமையில் நான் இசையிலும், நாடகத்திலும் ஈடுபாடு மிக்கவனாக இருந்த காரணத்தாலும், படக் கம்பெனியின் பங்கு தாரர்கள் என் குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர் களாக இருந்த காரணத்தாலும், எனக்கிருத்த எடுப் பான தோற்றத்தாலும் அப்படத்தில் அரசனாக நடிக் கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கவி காளமேகம் படப்பிடிப்பின் போது பாவேந்தரோடு ஏற்பட்ட நெருக்க மான பழக்கம் பின்னும் தொடர்ந்தது.

பாவேந்தரை நான் முதன் முதலில் சந்தித்த போது "மாந்தோப்பில் மணம்' என்ற பாடலை இசையோடு பாடிக் காட்டினேன்; அவர் மிக்க மகிழ்ச்சியடைந்தார். அவர் எழுதிய வேறு பாடல்களையும் இசையமைத்துப் பாடிக் காட்டும்படி அடிக்கடி கேட்பார்; நானும் பாடு வேன்.

  • வாழ்க வாழ்கவே!' என்று திராவிட நாட்டை வாழ்த் திப் பாவேந்தர் எழுதியபாடல் இசைக்குயில் எம்.எல். வசந்தகுமாரியால் பாடப்பட்டுத் தமிழகத்தில் பெருத்த விளம்பரம் பெற்றதை யாவரும் அறிவர். இந்தப் பாடல் தோன்றுவதற்கு மூலகாரணம் நான்தான். நாடகத்தில் முதலில் கோரஸ்" பாடுவதற்கு நல்ல பாடலொன்று எழுதிக் கொடுக்க வேண்டுமென்று நானும் என் நாடக நண்பர்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பாட லைப் பாவேந்தர் எழுதிக் கொடுத்தார்.

24-8-40 இல் திருவாரூரில் நீதிக்கட்சி மாநில மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் முதன் முத லாக இப்பாடல் அரங்கேற்றப்பட்டது. மாநாடு முடிந்து சேலம் திரும்பிக் கொண்டிருந்தேன். அறிஞர் அண்ணா வும், இளந்தாடி நெடுஞ்செழியனும் நான் பயணம் செய்த அதே பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந் தனர். மீண்டும் மீண்டும் இப்பாடலைப் பாடும்படி இரு