பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

to முருகுசுந்தரம்/65

கும்படி தொலை பேசியில் கூறிவிட்டுச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். "'உங்கள் கருத்துக்கள் சிலவற்றில் எனக்கு மாறுபாடு உண்டு. ஆனால் உங்கள் அழகின் சிரிப்பிலும், குடும்ப விளக்கிலும், பாண்டியன் பரிசிலும் என் உள்ளத்தைப் பறிகொடுத்தேன்' என்று குறிப்பிட்டார். - -

நான் கொஞ்ச காலம் கல்கி, தினத்தந்தி பத்திரிகை களின் விற்பனை ஏஜென்டாக இருந்தேன். எனவே கல்கி கிருஷ்ணமூர்த்தியிடம் எனக்கு நெருங்கிய தொடர்புண்டு. ஒரு நாள் கல்கி என்னிடம் பேசிக்கொண் டிருந்தபோது, பாரதி படைப்புக்களில் பாஞ்சாலி சபதந் தான் வேகம். பாரதிதாசன் பாட்டு வரிக்குவரி வேகம், அவர் சார்ந்துள்ள இயக்கம் அவரைக் குடத்து விளக் காக ஆக்கியுள்ளது' என்று குறிப்பிட்டார்.

கடலூர் திருக்குறள் அச்சக(திருக்குறள் முனுசாமி யுடையது) முகவரியிலிருந்து உடனே புறப்பட்டு வரும் படி பாவேந்தர் ஒரு நாள் தந்தியடித்திருந்தார். ஏதோ முக்கியமான அலுவல் போவிருக்கிறது என்று எண்ணி நானும் என் மனைவி பூபதியும் புறப்பட்டோம். கையில் அப்போது போதிய பணமில்லாததால் கடன் வாங்கிக் கொண்டு மதுரையிலிருந்து புறப்பட்டோம். கடலூர் திருக்குறள் அச்சகத்துக்குப் போனபோது பாவேந்தர் முதல்நாளே புதுவை சென்றுவிட்டதாகச் சொன்னார் கள். உடனே புதுவைக்குப் போனோம். புதுவை வீட் டில் பாவேந்தரைச் சந்தித்ததும் ஒன்றும் அவசரமான வேலை எதுவுமில்லை. கொஞ்சம் worried ஆ இருந்தேன் . அதுதா... சும்மா பேசிக்கிட்டிருக்கலாமுன்னு கூப் பிட்ட... அவ்வளவுதா...' என்றார். நான் அப்போது பாவேந்தரைப் பார்க்கவில்லை. ஒரு குழந்தையைத் தான் பார்த்தேன். என் மனைவி பூபதி மீனைத் தொடாதவள். பாவேந்த ருக்காகத் தொட்டுச் சமைத்துப் பழகினாள். சாப்பாடு