பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதியிருக்கின்திரே! அதன் பொருளென்ன?’ என்று கேட்டான்.

உடனே நெரூடா, நண்பரே! ஒரு பெண்ணிடம் வயதைக் கேட்பதும், ஒரு கவிஞனிடம் இதுபோன்ற கேள்விகள் கேட்பதும் ஒன்றுதான். க வி ைத ெய ன் பது ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கும் பொருளன்று. அது சுழித்து ஒடிக்கொண்டிருக்கும் நீரோட்டம்; அது சில சமயம் படைப்பாளியின் கையிலிருந்தும் நழுவிச் சென்று விடுவதுண்டு. கவிஞன் கை யா ளு ம் மூலப்பொருள் உண்மைப் பொருளாகவும் இருக்கலாம் ; இன்மைப் பொருளாகவும் இருக்கலாம். எ ப் படி யி ரு ப் பி னும் உங்களுக்கு ஒரு நியாயமான பதிலைச் சொல்ல நான் முயற்சி செய்கிறேன். சுதந்தரத்தையும் பேரின் பத் தையும் நோ க் கி விரிந்து செல்லும் வானவெளியை இக் குறிப்புச் சுட்டுகிறது. லார்கா எந்த இடத்தில் தோன்றினாலும் அவ ைன ச் சுற்றியொரு மந்திரக் கவர்ச்சியும், மகிழ்ச்சிச் சூ ழ் நி ைல யும் பரவுவது வழக்கம். எப்போதும் சோகமான சூழ்நிலையில் அமைந் திருக்கும் மருத்துவ மனைகள் கூட, மகிழ்ச்சியூட்டும் அவன் கவிதையின் மந்திரக் கவர்ச்சியால் மாறிப் பளிச் சென்று நீலவண்ணம் பெறுகின்றன - என்று வேண்டு மானால் நீங்கள் பொருள் செய்துகொள்ளலாம் ' என்று பதில் கூறினார்.

五墨拿