பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பருவத்திலேயே நாட்டுப் ப்ாடல் மெட்டுகளை அவ ன் முனு முனுப்பது வழக்கம். தங்களுடைய தோட்டத்தில் பணிபுரிந்த வேலைக்காரர்களிடம் பழமையான ஆண்ட லூசியக் கிராமியப் பாடல்களையும் (Folk Songs) கதைப் பாடல்களயும் (Ballads) கேட்டுக் கேட்டு லார்கா மனப் பாடம் செய்திருந்தான். இளமையில் அவன் குருதி யோட்டத்தில் ஊறிப்போயிருந்த நாட்டுப்புறக் கலை, அவன் எதிர்காலப் படைப்புக்களில் புதிய அழகோடு பூத்துக் குலுங்கியது.

ஆண்டலூசியக் கிராமியப் பா ட ல் லா ர்கா வி ன் உள்ளத்தில் குளித்து, எவ்வாறு புதுவடிவம் பெறுகிறது என்பதை டோர்ரே என்ற அறிஞன் குறிப்பிடும்போது, லார்கா அ வ ற் றை இ ைசயோ டு பாடுகிறான் ; அவற்றைக் கனவு காண்கிறான் ; அவற்றை ஆய்வு செய்கிறான். குறிப்பாகச் சொன் னா ல் கற்பனை அழகோடு கூடிய கவிதைகளாக அவற்றை மாற்றுகிறான்' எ ன் று கூறு கிறார். எடுத்துக்காட்டுக்கு ஒன்றைக் குறிப்பிடலாம்.

ஒருமுறை உல்லாசப் பயணத்தின் போது, கோவேறு கழுதையை ஒட்டிச் சென்ற ஒருவன் பாடிய கிராமியப் பாடல் வரிகள் லார்காவின் காதில் விழுந்து உள்ளத்தில் பதிவாகி விட்டன.

அவளை ஒரு கன்னிப் பெண்ணென்று நினைத்து ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றேன்

ஆனால் - அவளுக்கு ஒரு கணவன் இருந்தது பிறகுதான் தெரிந்தது

I of 5