பக்கம்:குறள் நானூறு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்ருேர் சொல்லின் தொகுப்பெல்லாம் அறிந்த தூய்மையானவர். அவர் குழுமியுள்ள அவை பெருமை மிக்கது. அதிற் புகுவோர் அப்பெருமையை நினைவிற் கொள்ளல் வேண்டும். கொண்டு அந்த அவைக்கேற்ற கருத்துகளை ஆராய்ந்து சொல்லுவாராக! 236

அறிவுள்ள அறிஞர் குழுமியுள்ள அவையில் தானும் அறிவுள்ள அறிஞளுகவே அமையவேண்டும். அறிவற்ற வர் வெள்ளியார் எனப்படுவர். அவர் சேர்ந்த அவை யில் அவர்க்குமுன் மிகச் சிறந்த சுதைச் சிற்பம் தன் மேல் பூசப்படும் எந்த வண்ணத்தையும் ஏற்றுக் கொள்வதுபோன்று அவர் நிலையிலேயே அமைய

வேண்டும், 237 தம்மை ஒத்த குழுவினர் கூடிய அவையைத் தமக் குத் தக்க அவையாகக் கொள்ளவேண்டும். தமக்

கேற்ற குழுவினர் அல்லார் அவையில் நின்று தன் கருத் தைக் கூறுதல் கழிவுநீர் வாரியுள் சிந்திய பாலைப் போன்று பயனற்றுப் போகும். 238

பகைகொண்ட போர்க்களத்தில் அஞ்சாமல்சென்று இறப்பவர் பலராகையால் அவரெல்லாரும் எளியவர். சான்ருேர் குழுமிய அவையில் அஞ்சாமல் உரையாற்று பவர் மிகச் சிலராகையால் அவர் கிடைத்தற்கு அரியர், 239

நன்கு கற்றவர் அவையில் தாம் கற்றவை பாராட் டுப் பெறுமாறு சொல்லுதல் வேண்டும். தம்மை விட நன்கு கற்ற மேம்பட்டவர் குழுமிய அவையில் மேம்பட்ட கருத்துக்களே அஞ்சாமற் கேட்டுப் பெறல் வேண்டும். 240

憩&

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/110&oldid=555607" இலிருந்து மீள்விக்கப்பட்டது