பக்கம்:குறள் நானூறு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாந்தனுக்குரிய உறுப்புக்கள் ஒத்திருப்பது மட்டும் மக்கட் பிறப்போடு ஒத்ததாக ஆகிவிடாது. மக்கட் பிறப்பிற்குரிய நிறைந்த பண்பால் ஒத்திருப்பதே மக்க ளினத்திற்கு ஒத்த ஒப்பு ஆகும். 316 சிரித்துப் பொழுதுபோக்காகப் பேசும் பேச்சிலும் பிறரைப் பழித்துப் பேசுவது துன்பமானதாகும். பகை வரிடத்தும் உள்ள பெருமைகளை அறிபவரிடம் பண் பாட்டுச் செயல்கள் உண்டாகும். எனவே நண்பரை யும் பழிக்காமல், பகைவரையும் மதித்து ஒழுகுதல் பண்புடைமை ஆகும். 8 [ 7 தான் உராயும் பொருள்களேக் கூர்மையாக்கித் தன் கூர்மையிலும் மழுங்காதது அரம். அதுபோன்று கூர்த்த அறிவுள்ளவரானுலும், மக்கட்பண்பு உள்ளராக வேண்டும். இல்லாதவர் மரம் போன்றவரே யாவார். 3 # 8

மிக அழகுவாய்ந்த குமரிப்பெண் திருமணம் பெருது தனியளாய் மூப்பு அடைதல் பயனற்ற வாழ் வாகும். அதுபோன்றே, செல்வம் அற்ற ஏழையர்க்கு உதவி செய்யாதவன் செல்வம் நன்மை இல்லாத செல்வம். அது பயனற்று வீணுக அழியும். 3 } {}

ஊரின் நடுவே நச்சுத் தன்மையுள்ள பழங்களைத் தரும் மரம் பழுத்தால் மக்களுக்குப் பயன்படாமல் தீமையையும் தரும். அதுபோன்று. மக்களால் விருப் பப்படாதவன் பெற்ற செல்வமும் பயன்படாமல் தீமையையும் தரும். 、忽级

130

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/142&oldid=555639" இலிருந்து மீள்விக்கப்பட்டது