பக்கம்:குறள் நானூறு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனைவி வாழ்க்கைத் துணை. அவள் இல்லறத் திற்குத் தக்க நல்ல குணம், நல்ல செயல் உடையவள் ஆகவேண்டும். தன் கணவன்து வருவாய்க்குத் தக்க செலவு செய்பவளாதல் வேண்டும். இன்றேல் அவள் வாழ்க்கைப் பகை. 21

வாழ்க்கைத் துணையாம் பெண் கற்பு என்னும் மன உறுதியைப் பெற்று வாழவேண்டும். பெற்ருல், பெண்ணைப் போல் பெருந்தகுதி உடையவை உலகில் வேறு எவையும் இல்லை. 22

மனைவி சிறு தெய்வங்களைத் தொழமாட்டாள். கணவனையே தொழுது எழுவாள். அவள் வேண்டும் பருவத்தில் பெய்’ என்ருல் பெய்யும் மழை போன்று பயன் தருபவள். - 25。

இல்லறத்துப் பெண் கற்பு தவருமல் தன்னைக் காத்துக் கொள்பவள் ; தன் கணவனைப் போற்றிக் காப்பவள் ; தகுதி உடைய புகழைக் காப்பவள் ; மனத்தளர்ச்சி இல்லாதவள். 24

புகழை விரும்பி இ ல் ல் ற த் ைத நெறியுடன் நடத்தும் மனைவியைப் பெற்ற கணவன் பெருமிதம் உடையவன். அவன் தன்னை இகழ்பவர் முன்னும் அரிமா போல் பெருமிதமான நடை போடுவான். அத்தகைய மனைவியைப் பெருதவர்க்கு அந்தப் பெரு மித நடை இல்லை. - 25.

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/22&oldid=555519" இலிருந்து மீள்விக்கப்பட்டது