பக்கம்:குறள் நானூறு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் சூழ்நிலையின் வலிமைக்கு ஏற்பத் தன்னை அமைத்துக்கொண்டு ஒழுகவேண்டும். தன் வலிமையின் அளவையும் அறிய வேண்டும் ண்டையும் ஆ றியாத வய்ைத் தன் வலிமையைத் தவருகக் கணக்கிட்டுத்

தன்னேயே வியந்துகொள்பவன் விரைந்து கெடுவான்.

16 !

தன் செல்வ நிலைமையின் அளவறிந்து வாழாதவ னது வாழ்க்கை வளமாக உள்ளதுபோன்று தோன்றும், போகப் போக வளம் இல்லையாகிப் பிற்காலத்தும் வளம் தோன்ற முடியாத அளவில் கெடும். I 62

எடுக்கும் செயலுக்கு ஏற்ற கருவியுடன் செய்யசி தக்க காலத்தை அறிந்து செயலாற்ற வேண்டும்’ அவ்வாறு செய்தால், செய்து முடிப்பதற்கு முடியாத செயல்கள் என எவையும் இல்லை. I 63

உலகத்தையும் தன் உரிமையாக்கிக்கொள்ளக் கருதுபவர் தன் கருத்து அரியது என்று கலங்கமாட் டார். கலங்காமல், நிறைவேற்றுவதற்குரிய காலத்தை எதிர்நோக்கியிருப்பர், தக்க காலத்தில் முடிப்பர். 164

அறிவு நிரம்பிய திறனுளர் எடுத்த செயலில் தடை தோன்றினுல் உடனே உணர்ச்சி வயப்பட்டுப் பொங்கி எழமாட்டார். தடையை நீக்கிச் செயலாற்றத் தக்க காலத்தை எதிர்பார்த்து உள்ளத்தில் பொங்கிக்கொண் டிருப்பர். - IË G5

翁母

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/80&oldid=555577" இலிருந்து மீள்விக்கப்பட்டது