பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 245

'நான் கேட்பதைத் தப்பாக எடுத்துக்கொள்ளாதே! பூரணி நீ சொன்னால் எதையும் தட்டமாட்டாள் அல்லவா?"

எதற்காக, ஏன், என்ன நோக்கத்தோடு இதை அவர் கேட் கிறாரென விளங்காமல் அரவிந்தன் பதில் சொல்லத் தயங்கினான்.

19

குண்டலந் திகழ் தரு காதுடைக் குழகனை வண்டலம்பும் மலர்க் கொன்றைவான் மதியணி செண்டலம்பும் விடைச் சேடனுர் ஏடகம் கண்டுகை தொழுதலும் கவலை நோய் அகலுமே

. - திருஞானசம்பந்தர் "蘇 மனம் வைத்தால் நிச்சயமாக இந்தக் காரியத்தைச் சாதிக்க முடியும் அரவிந்தன். அதற்கு இதுதான் சரியான சமயம். துணிந்து தான் இதில் இறங்க நினைத்திருக்கிறேன்...' .

இதற்கு அரவிந்தன் ஒரு பதிலும் சொல்லாமல் தமது முகத்தையே பார்த்தவாறு அமர்ந்திருப்பதைக் கண்டதும் மீனாட்சி சுந்தரம் பேச்சை நிறுத்தினார். எழுந்திருந்து கைகளைப் பின்புறம் கோர்த்துக் கொண்டு அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். மனத்தில் திட்டங்களும் தீர்மானங்களும் உலாவும்போது கால்களையும் இப்படி உலாவவிட்டுப் பழக்கம் அவருக்கு.

'என்னப்பா இது? நான் மட்டும் பேசிக்கொண்டே இருக்கிறேன். உன்னிடமிருந்து ஒரு வார்த்தைகூடப் பதில் வரவில்லையே!” -

"நீங்கள் சொல்லுவது என்னவென்று நான் சரியாக விளங்கிக் கொள்வதற்கு முன்னால் எப்படிப் பதில் பேச முடியும்?" .

'அதுதான் சொன்னேனே, அரவிந்தன் பூரணி நீ சொன்னால் எதையும் மறுக்காமல் சம்மதிப்பாள் அல்லவா? முதலில் இது எனக்குத் தெரிய வேண்டும்."

நான் சொன்னால் தான் கேட்பாள் என்பதென்ன? நீங்கள் சொன்னாலும் கேட்கக்கூடியவள் தானே?" .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/247&oldid=555970" இலிருந்து மீள்விக்கப்பட்டது