பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 குறிஞ்சிமலர் கண்டு கைதொழுதால் கவலை நோய் அகலும் என்று சம்பந்தர் பாடியிருந்தார். உண்மையிலேயே கவலையைப் போக்குகிற ஏதோ ஒர் ஆற்றல் அந்த ஊரின் செயற்கை அழுக்குகள் படியாத இயற்கை அழகில் இருப்பதை அரவிந்தன் உணர்ந்தான். நெடுந் துரத்திற்கு நெடுந்தூரம் ஆள் புழக்கமற்ற பெரிய தென்னந்தோப்பு ஒன்றில் பேதைப் பருவத்துச் சிறுமி ஒருத்தி தனியாகப்புகுந்து மருண்டு ஓடுவதுபோல் வையை நதி அந்தப் பிரதேசத்தில் பாய்ந்தோடுகிற அழகைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதுமே ஆற்றின் இரு கரையும் நிறைய ஆணவம் பொங்கிடப் பாய்கிற வழக்கம் வையையிடம் இல்லை. புது மணப்பெண் நடந்து செல்லுகிற மாதிரி ஒல்கி ஒசிந்து ஒர் ஒரமாகப் பாய்ந்து செல்வது வையையின் அடக்கத்துக்கு ஓர் அடையாளமோ?

தேவாரப் பாடசாலையைச் சுற்றிப் பார்த்து விட்டு மீனாட்சி சுந்தரமும், அரவிந்தனும் ஏடகநாதரை வழிபடச் சென்றார்கள். அம்மன் சந்நிதியில் பூக்கட்டி வைத்துப் பார்ப்பதென்று திட்டம். 'ஏலவார் குழலி அம்மை என்று எழில் வாய்ந்த தமிழ்ப்பெயர் திருவேடகத்து அம்மனுக்கு. திருஞானசம்பந்தர் காலத்துப் பாண்டியன் கட்டியதாகத் தல வரலாறு கூறும். அந்தக் கோவிலை பின்னாளில் நாட்டுக் கோட்டை செட்டிமார்கள் பெரிதாக்கி அழகு படுத்தி இருந்தார்கள். தமிழ்நாட்டுத் திருத்தலங்களில் ஒவ்வொரு கோவிலும், ஒவ்வொரு கல்தூணும், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்குமே!. -

கோவிலுக்குள் மீனாட்சிசுந்தரமும் அவனைக் கேட்டார், 'என்னுடைய வழக்கம் தான் உனக்கு நன்றாகத் தெரியுமே. இந்தக் கோவிலில் பூக்கட்டி வைத்துப் பார்த்தபின் முடிவு நன்றாக இருந்தால் நான் எதையுமே நிறுத்த மாட்டேன். எப்பாடு பட்டாவது அந்தக் காரியத்தை நிறைவேற்றியே தீருவேன். இப்போது இங்கே அம்மனுடைய தீர்ப்பு எப்படி ஆகிறதோ, அப்படியே செய்வதற்கு நீயும் இணங்குகிறாய், நீயும் கட்டுப் படுகிறாய் அரவிந்தன் என்ன? உனக்குச் சம்மதந்தானே?"

அரவிந்தனுக்குச் சமய நம்பிக்கை உண்டு; ஆனால் சடங்கு களில் நம்பிக்கை குறைவு. அந்தச் சமயத்தில் அவரை விட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/258&oldid=555981" இலிருந்து மீள்விக்கப்பட்டது