பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 365

மனத்துக்குள் சொல்லிக் கொண்டான். பிழையான பகுதிகளை அடியில் சிவப்புமையால் கோடிட்டு அந்தப் பெரியவரிடம் கொடுத்து 'ஐயா பெரியவரே! திருத்தியிருக்கிற இடங்களை யெல்லாம் படியுங்கள். இந்த மாதிரித் திருமணப்பத்திரிகைகளில் 'கொலைச் செய்தி அச்சடித்துத் தருகிற அளவு அலட்சியமாக எங்கள் அச்சகத்தில் வேலை நடக்காது. நாங்கள் பிழையில்லாமல் பொறுப்போடு நன்றாக அச்சிட்டுத் தருவோம், அதனால் எங்கள் தொகையும் சிறிது அதிகமாகத்தான் இருக்கும்' என்று சிரித்த வாறே சொல்லிவிட்டான். அழைப்பிதழைக் கூர்ந்து படித்ததும் நாட்டுப் புறத்து மனிதரின் முகமும் கடுங்கோபம் நிறைந்ததாக மாறிற்று.

'படுபாவிப் பயல்கள் மூஞ்சியில் நெருப்பை அள்ளி வைக்க, இப்படியா அச்சடிப்பானுக? இவனுக வீட்டிலே எழவு விழுக. கையிலே கொள்ளியைத்தான் வைக்கணும் என்று கூறிக் கொண்டே ஆத்திரத்தோடு வெளியேறிக் காமாட்சி அச்சகத்துக்குப் போர் தொடுக்கக் கிளம்பினார் அவர் இன்னொரு முறை ஏதோ ஓர் இடத்தில் பாரதி விழா அமைத்திருந்தவர்கள், நிகழ்ச்சிநிரல் அச்சடிக்க வந்தார்கள். அரவிந்தன் கூறிய தொகையைவிட காமாட்சி அச்சகத்தில் மலிவு என்று அங்கே போய் மலிவாக அச்சிட்டு வந்தனர். நிகழ்ச்சி நிரல் தலைப்பில் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்' என்றிருக்க வேண்டிய பாரதியின் கவிதை வரி, 'பாரத தேசமென்று தேள் கொட்டுவோம்' என்று சந்தி சிரிக்க அச்சாகியிருந்தது. அதே பாரதி விழாவில் முருகானந்தம் சொற்பொழிவு செய்ய நேர்ந்தது. சொறபொழிவின் நடுவ்ே தேள் கொட்டுவோம்’ என்று அச்சாகியிருக்கும் ரகசியத்தை அம்பலப் படுத்தி விட்டான் முருகானந்தம்.

'சொந்தப் பகை ஆயிரம் இருக்கலாம்; பொதுக் கூட்டத்தில் போய் இதையெல்லாம் எதற்குப் பேசுகிறாய்? தப்பாக எண்ணிக் கொள்ளப் போகிறார்களே?" என்று அரவிந்தன் அவனைக் கண்டித் தான். ஆனால் அதற்குச் சிறிதும் அஞ்சாமல் முருகானந்தம், 'நீ சும்மா இரு, அரவிந்தன், நான் எவனுக்கு பயப்பட வேண்டும்! தப்பு என்று பட்டதைக் கூசாமல் கண்டிக்க வேண்டியதுதான்' என்று கூறிவிட்டான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/367&oldid=556090" இலிருந்து மீள்விக்கப்பட்டது